பறவைகளை நோக்குதல் (Bird Watching), காட்டுயிர்களை-இயற்கையை உற்றுநோக்கி அறிவது போன்றவை மிகப் பெரிய பொழுதுபோக்காகவும் சாகசச் செயலாகவும் இன்றைக்குக் கருதப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதிவிட முடியாது. ஏனென்றால் உலகின் மிகப் பெரிய பறவையியலாளராக மதிக்கப்படுகிற சாலிம் அலி, இப்படித்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதனால் இயற்கை மீதான காதல், பறவைகள், உயிரினங்களை நோக்குவது, அவற்றின் மீது அக்கறையாக இருப்பது, நாளை நமது முழுநேர வேலையாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.இந்திய பறவைகள், பறவையியல் என்று கூறியவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் சாலிம் அலியினுடைய பெயர்தான். பறவை நோக்குதல் போன்ற செயல்பாடுகள் பரவலாகவும் இ
பறவை என்ற வார்த்தையை கேட்டவுடன் நம்மில் பல பேருக்கு ஞாபகம் வரும் முதல் மனிதர் சாலிம் அலி, பறவை மனிதர் என்ற பெயருக்கு சொந்தக்காரர்.இவரின் விடாமுயற்சியும், , கடின உழைப்புமே இவரின் மாபெரும் சக்தியாக இருந்திருக்கிறது. இவரைப் பற்றிய பல உண்மை தகவல்களும் பொய்யான தகவல்களும் நம்மில் இருக்கிறது - பொய்யான தகவல்களை, மெய்யான தகவல்களால் இடம்பெயர்க்க இந்த புத்தகம் வழிவகை செய்கிறது.
*ரஜினிகாந்த்-அக்ஷய்குமார் நடித்த '2.0' திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் படத்தில் வரும் பட்சிராஜன் கதாபாத்திரம் சாலிம் அலியை மையமிட்டே உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சாலிம் அலி அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பறவைகளையும் காடுகளையும் காக்கப் பாடுபட்டவர். ஆனால், படத்தில் வரும் பட்சிராஜனோ அதற்கு நேர் எதிராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். கைபேசி கோபுரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வுகள் எச்சரித்தாலும், சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகள் நகர்ப்புறங்களில் குறைந்ததற்கும் கைபேசி அலைவரிசைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. '2.0' படம் இந்த அறிவியல்பூர்வமற்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு இயற்கைப் பாதுகாவலரை பயங்கரப் பேயாகச் சித்தரித்த படம் '2.0'. படத்தின் இயக்குநர், திரைக்கதையாசிரியர் போன்றோரே இதுபோன்ற தவறான, அறிவியல்பூர்வமற்ற சித்தரிப்புக்குக் காரணம்.*
உயரப் பறந்த இந்த இந்திய குருவி மற்ற குருவிகளைப் போல் எடையில் குறைந்ததல்ல ஏனென்றால் அதன் இறக்கை மீது தீராத ஆர்வமும் திறந்திடாத அறிவியல் நுட்பத்தையும் சுமந்து கொண்டிருந்தது.
சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியா பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.
20 பக்க புத்தகத்தில் நம் எல்லோருக்கும் சாலிம் அலி பற்றி புரிய வைத்த ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
🐦நம்மில் எவ்வளவு பேர் நாம் விரும்பும் துறை சார்ந்த தகவல்களைத் தேடித் தேடிச் சேகரிக்கிறோம்? ஆராய்கிறோம்? அப்படியானதொரு வாழ்வு எவ்வளவு சுவாரசியமானது? எவ்வளவு சாகசங்கள் நிறைந்தது? இந்தியப் பறவையியலாளர் சாலிம் அலி அப்படிப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இந்நூலில் கிடைக்கும். இப்புத்தகம் குழந்தைகளுக்கானது.
🐦இதுவரை இல்லாத அல்லது பிரபலம் அடையாத ஒரு வேலையை செய்ய/உருவாக்க ஆர்வமுடைய ஒருவருக்கோ அல்லது பிடிக்காத ஒரு வேலையை விட்டுவிட்டு பிடித்த துறையில் ஒரு வேலையை தேடுபவருக்கோ நிச்சயம் சாலிம் அலி ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வார்.
🐦சாலிம் அலி எழுதியுள்ள இரண்டு நூல்கள்: 1) ‘The Book of Indian Birds’ 2) ‘A Fall of a Sparrow’ (தமிழில் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’) – வாழ்க்கை வரலாறு
🐦இப்புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரிகள்: 1) ஒரு வேலையை அனுபவித்து மகிழ்ச்சியாகச் செய்ய முடிந்தால், அதன் மூலம் சிறந்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்
2) தான் மேற்கொள்ளும் பணியில் ஒரு மனிதன் உள்ளத் தெளிவுடனும் மனஉறுதியுடன் இருந்தால், எதுவும் சாத்தியம் என்பதே அவரது வாழ்க்கை சொல்லும் சேதி
One man army for environmental especially birds love
Quick read, Such a inspiring biography about a person who spent his life time in environmental learning. Salim sir is one of the person who understands everything by just observation.If you want to love everything just observe.
சாலிம் அலி அந்த காலகட்டத்தில் பறவைகளை பற்றி அறிந்துகொண்ட முறை, பறவைகளின் வாழ்வியல் முறை , அவை மேற்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் நன்றாக கூறப்பட்டுள்ளது, நல்ல மொழிபெயர்ப்பு நூல்.