கடந்த காலத்தில் தனக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தால் சிரிப்பைத் தொலைத்த நாயகன் ஆர்யவர்தன்.. குறும்புத்தனத்துடன் முகத்தில் புன்னகை சற்றும் குறையாமல் வலம் வருபவள் நாயகி மதுரா.. பெற்றோரின் விருப்பத்திற்காக அவர்கள் பார்த்த பெண்ணை (நாயகி) திருமணம் செய்து கொள்கிறான் நாயகன்.. மனைவியை தன்னுடைய ரெஸ்பான்சிபிலிட்டி என்று நாயகன் நினைக்க, கணவன் மேல் காட்டுவது அக்கறை என்று நாயகி நினைக்க ரெஸ்பான்சிபிலிட்டியும் அக்கறையும் எப்போது காதலாக மாறியது என்பதை இருவரும் அறியார்.. பெற்றோரின் சந்தோஷத்துக்காக செய்து கொண்ட திருமணத்தை தங்களுக்கு பிடித்த காதல் வாழ்க்கையாக மாற்றி கொண்டார்களா இல்லையா என்பது வாருங்கள் பார்க்கலாம்..