Jump to ratings and reviews
Rate this book

பல்லவ திலகம்

Rate this book
Historical Based Fiction Written By Sandilyan

Kindle Edition

Published June 7, 2021

10 people are currently reading
498 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (36%)
4 stars
66 (29%)
3 stars
52 (23%)
2 stars
15 (6%)
1 star
7 (3%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
மக்கள் சேதத்தை குறைக்க வெற்றியை பரிசாக எதிரி அரசனுக்கு அளித்த பல்லவனைப் பற்றியும், நாட்டிற்காக தன் மனதில் குடிகொண்டவனை வேறொருத்திக்கு விட்டுக்கொடுத்த பல்லவ குடிமகளைப் பற்றியும், மன்னன் கட்டளைக்கு மறுவார்த்தையில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் வீரனைப் பற்றியும் அனைத்து ரசங்களையும் கலந்து கூறியிருக்கிறார் சாண்டில்யன்
Profile Image for Srikanth R.
123 reviews11 followers
August 11, 2012
Historical/Political thriller.... Superb book... Maintained a good pace throughout the book... And the finish was realistic....
15 reviews
March 1, 2024
சமீபத்தில் படித்த சாண்டில்யன் கதை பல்லவ திலகம் இன்னும் சாண்டில்யன் கதைகளில் படிக்காத கதை என்றால் அது விஜயமகாதேவியும் சித்தரஞ்சனி மற்றும் நாக தேவி கூடிய விரைவில் படிக்க வேண்டும்
மூன்று கதைகளையும்

பல்லவ திலகம் பல்லவ மன்னன் தந்தி வர்மன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பரம வைஷ்ணவ மன்னான தந்தி வர்மன் போர்களை வெறுக்கிறான் அவன் அன்னை ராஜ மாதா போர்களை விரும்புகிறாள் இதற்கிடையில் இதய வர்மன் என்ற வீரன் மாட்டி எப்படி சிக்கி கொள்கிறான் இறுதியில் மன்னன் விரும்பியது நடந்தா அன்னை விரும்பியது நடந்தா என்று முடித்து இருக்கிறார் மற்றது எல்லாம் கதையை படிக்க படிக்க தெரிந்து கொள்ளுங்கள் ஒரே ஒரு மனவருத்தம் சேரன் செல்வி அலை அரசி போன்ற தேவையில்லாத கதைகளுக்கு எல்லாம் ஐம்பது பாகம் போட்டு விட்டு இந்த கதையை முப்பத்தி ஆறு பாகங்களில் முடித்து விட்டாரே இன்னும் கொஞ்சம் எழுதி இருந்தால் அருமையாக இருக்கும்.... கதையின் முடிவு உண்மையில் மிகவும் பிரமாதம்
2 reviews
November 18, 2023
போரை வெறுக்கும் மன்னன் போர் நடக்க வேண்டும் என்று ஆசை படும் மன்னனின் தாய் இருவருக்கும் நடுவில் கதாநாயகன் இதய வர்மன் யார் பக்கம் என்று தொடங்கும் கதை.மெல்ல சூழ்ச்சி வலை தொடங்கி தாயின் ஆசை படி போர் நடக்கிறது ஆனால் மன்னரின் ஆசையும் நிறைவேறியது இதற்கு நடுவில் காதல் கதை சாண்டில்யன் கதைகளில் கதாநாயகன் கதாநாயகி இடுப்பைப் வருடுவது காதல் வசனம் பேசிக்கொண்டு இருப்பது என்று இருக்கும் ஆனால் இதில் சற்று மாறுதல் காட்டி இருப்பது போல் தோன்றுகிறது கதையின் முடிவு சிவகாமி சப்தத்தை நினைவு கூறுகிறது ❤️❤️❤️
Profile Image for Sathiyaraj Sriramamoorthy.
6 reviews5 followers
January 11, 2019
சாண்டில்யன் நாவலில் என் முதல் பயணம் இது.
கதையின் விறுவிறுப்பு எங்கும் குறையாமல், காதலையும் பெண்களையும் வர்ணிப்பது எங்கும் வெட்காமல் படைத்துள்ளார்.
தந்திவர்மனின் இருப்பை கதையில் அதிகப் படுத்தி இருந்தால் இன்னும் கதை விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.
168 reviews1 follower
June 29, 2021
Okish one time read. !!! Not too addictive like Other Sandilyan's works ...
Profile Image for Sanjay Rajan.
20 reviews
June 4, 2016
This book has a good story with a good pace. Thank God Sandilyan finished this so short so that it is quite interesting till the end. There are only a handful of characters whom are very well portrayed throughout.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.