Jump to ratings and reviews
Rate this book

மலைவாசல்

Rate this book
Historical Based Fiction Written By Sandilyan

Kindle Edition

Published June 7, 2021

19 people are currently reading
201 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
31 (29%)
4 stars
27 (25%)
3 stars
35 (33%)
2 stars
9 (8%)
1 star
2 (1%)
Displaying 1 - 12 of 12 reviews
2,121 reviews1,109 followers
October 25, 2018
ராஜ்ஜிய எல்லையை விஸ்தரிப்பதில் மன்னன் கையாளும் திட்டகளை விட எதிரிகளிடம் தன் எல்லையை விட்டுகொடுக்காமல் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மன்னன் தீட்டும் நுணுக்கமான திட்டங்களும் அறிவான சதிகளுமே நாட்டைக் காக்கும் அரணாகிறது.

நாடோடிகளான ஹுணர்கள் தன் கொடும் அழிப்புகளின் மூலம் பாரதத்தின் எல்லையில் இருக்கும் மக்களைக் கொன்று அந்நிலத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது குப்த சாம்ராஜியத்தை அழிவின் பாதையில் செலுத்துகிறது.

கட்டுப்பாடுகளே இல்லாத ஹுணர்களை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற திட்டத்துடன் குப்த ராஜ்ய சேனாதிபதியான அஜித் சந்திரன் தானே ஹுணர்கள் ஆளும் பகுதியான மலைவாசலில் போரிட்டு தோற்று அடிலனிடம் கைதியாகிறான்.

அடிமை காலத்தில் அஜித் சந்திரனின் அறிவு அடிலனின் மகளான சித்ராதேவிக்கு அவனை உபாத்தியாயராக்குகிறது.இரண்டு வருடங்கள் அவளுக்கு கல்வியைப் போதித்தவனின் மனதில் அவள் மீது காதலும் எழுவதால் அதுவே அவனைக் கொல்லும் முயற்சிக்குக் காரணமாகிறது.

தன் உயிரை காப்பாற்றிய சித்ராதேவியை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகே சந்திக்கிறான் அஜித் சந்திரன்.

மலைவாசலில் இருந்து தப்பித்தவன் ஹுணர்களின் மற்றொரு தலைவனான தோரமானாவிடம் உபசேனாதிபதியாகப் பணியாற்றுகிறான்.

குப்த மன்னனா ஸ்கந்தகுப்தன் நாட்டைக் காக்க தொடர் போரில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதுடன் நாட்டின் செல்வமும் குறைந்து போய்ப் படைகளைத் திரட்ட கூடச் செல்வம் இல்லாத நிலையில் தவிப்பதை சரிசெய்யத் தோரமானாவிடம் இருந்து சந்தேகம் வராமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்வங்களைக் குப்த ராஜ்ஜியத்திற்கு அஜித் சந்திரன் அனுப்பி வைக்கிறான்.

தன் மகனை அரசனாக்க வேண்டும் என்று சிற்றன்னையான ஆனந்த தேவி தீட்டும் திட்டங்களையும் முறியடிக்க வேண்டிய கட்டாயமும் உடல்நலம் குன்றிய ஸ்கந்தகுப்தனுக்கு நேருகிறது.

அஜித் சந்திரனை மையமாக்கி அவனைச் சுற்றியே எதிர்காலக் குப்த ராஜ்ஜியம் இருப்பதாக விளையும் சம்பவங்களில் தன் அறிவை துணையாக்கி எதிரிகளிடம் இருந்து கொண்டே அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்துக் கொண்டு தன் காதலையும் வளர்த்து கொண்டுவருபவனுக்கு நெருக்கடிகளும் நிகழ்கிறது.

ஹுணர்கள் வம்சம் என்றாலும் மற்றவர்களைப் போல் அல்லாமல் மக்களிடம் ஹிந்து தர்மத்தின்படி நடக்கும் தோரமானாவிற்கு அஜித் சந்திரனின் சூழ்ச்சிகள் தெரிய வருகிறது.நேரடியாக அவனைக் கொல்லாமல் சட்டத்தின் முன் அவனைத் துரோகியாகக் காட்ட தன்னிடம் வேலை செய்யும் பல்தேவ்வின் மூலம் காய்களை நகர்த்தினாலும் உபாத்தியாயரின் புத்திசாலிதனமே வென்று தோரமானாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது குப்த ராஜ்ஜியத்திற்குச் சில ஆண்டுகள் ஆசுவாசம் கொள்ள வகை செய்கிறது.

முக்கியக் கதாபாத்திரம் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பின்னும் சூழ்ச்சி வலைகள் அஜித் சந்திரனின் வாளாலே கிழிபட்டுப் போகிறது.

சுவாரசியங்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது மலைவாசல் புதினம்.
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
இரண்டு இராஜதந்திரிகளுக்கிடையேயான போராட்டம் திடிர் திடிர் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இருந்தது. அஜீத் சந்திரன் - துர்காதேவி காதல் வளர்ந்தவிதம், அவர்களின் உணர்வுகள் கண்முன் நடப்பதைப் போல் கூறப்பட்டுள்ளது. துர்காதேவியின் பெயரை என் சரித்த அழகிகள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன்.
Profile Image for Karthick.
371 reviews123 followers
November 9, 2017
A very good (Espionage, war plan) plot! Ajith chandran is a lovable character!
The final chapter with full twist is the highlight!
It was like Agatha christie novel's twist.
My first Sandilyan's read :)
Profile Image for Antony Jerline.
27 reviews
July 12, 2023
குப்த ராஜியத்தைக் காப்பாற்றுவதற்கும், நிலைப்பதற்கும் கையாண்ட ராஜதந்திரங்கள், தெளிவான அனுகு முறைகள், அஜித் சந்தரனின் புத்திக் கூர்மை, எதிரிகளைக் கையாண்ட விதம், ஆபத்து நேரிடும் காலங்களில் தன்னைக் காக்க ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எடுத்துக் கொண்ட முயற்சி என்று நிறைய சொல்லிக் கொண்டேப் போகலாம். விருவிருப்பக்குக் குறைவு இல்லை. இந்த நாவலின் இறுதி அத்தியாயம் சற்று லாவமாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.
Profile Image for Perumal Peru.
5 reviews1 follower
May 8, 2025
அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு அருமை, கடல் புறாவில் இளைய பல்லவன் கதாபாத்திரத்தை நியாபகப்படுத்தியது. கதை தொடங்கியதில் இருந்து பல கேள்விகள் எழுந்தாலும் முடிவில் ஒவ்வொன்றிற்கும் அதன் முடிச்சியை அருமையாக அவிழ்த்து உள்ளார் சாண்டில்யன் அவர்கள் ❤️ சாண்டில்யன் கதைகளில் வரும் வர்ணிப்புகள் இதில் குறைவு ஆகையால் கதை எங்கும் தொய்வில்லாமல் சென்றது... கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை படிக்கலாம்
Profile Image for Kalai Arasi.
13 reviews
April 24, 2024
Super story..the Ajith chandran plan and strategy to save his kingdom is super...sandiliyan always fulfill our expectation... historical lovers just go ahead.
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
August 7, 2016
இந்த நாவல் சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் காட்டாறு போல் வேகமாய் நகர்கின்றது நாவல்.வர்ணனைகளை அதிகளவு நீட்டாமல் அளவோடு சாண்டில்யன் பாவித்திருப்பதனால் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு சூப்பரோ சூப்பர்.
Profile Image for Suganya D.
23 reviews
January 18, 2022
Disappointed with Chitra Devi character, as described initially about her, thought she will be powerful/vital character to the novel but she did nothing throughout the end😞
The book is all about Political Strategy between 2 powerful parties to secure and extend their territories.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
September 20, 2024
Fictional characters take up the main role, yet historical figures, events and facts are intact. The author always provide an interesting plot with imaginative characters to the history with utmost importance, evidence, moral values and captivating writing style.
1 review
December 29, 2014
ajithchandran's character is just lovable. the book gives us insight about the happenings during that period.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.