இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது.
இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது. கனவில் எல்லாமே குறியீடுகள். ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது. இது மெய்யான திபெத் அல்ல. இது நிக்கோலஸ் ரோரிச் தன். ஓவியங்களில் சித்தரித்த திபெத். ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம். அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண்.
இந்தக்கதைகளில் ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
Exploring the estoreic world of saints and yogis, these stories explore varied themes from the idea of sublimation, to obtaining salvation, the central mystery of the universe, these stories are complex and new.
Book#19 for the year ஜெமோவைப்பற்றியும் அவருடைய எழுத்துக்களைப்பற்றியும் இணையத்தில் படித்திருந்தாலும் அவருடைய புத்தகத்தை வாசிப்பது எனக்கு இதுவே முதல் முறை. என்னுடைய உறவினர் ஒருவர் ஜெமோவின் பரம ரசிகர், அவருடன் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த பொழுது ஜெமோவின் புத்தகங்களைப்பற்றி மிகவும் ரசித்து பேசிக்கொண்டிருந்தார், அதனால் இந்த புத்தகத்தை வாசிக்க தேர்ந்தெடுத்தேன்.. திபெத்தை கதைக்களமாக கொண்ட இந்நூலில் பல்வேறு வகையான சுயஅனுபவங்களும் மற்றவர்களிடம் கேட்ட கதைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திபெத்திய கலாச்சாரம், பௌத்த மடாலயங்கள், தாந்திரீக வழிபாட்டு முறைகள், கடவுள்களின் வரலாறு ஆகியவை இந்த அனுபவங்களின் வழியே கூறப்பட்டுள்ளன. இதில் பல அமானுஷ்யமான விஷயங்களின் விவரிப்புகள் மயிர்கூச்சரிய செய்தாலும், அவை ஒரு குறியீடாகவே பயன்படுத்தப்பட்டிருபதை ஆசிரியர் மிகவும் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். அதேபோல் பௌத்த சமயத்தின் பல தார்மீக கோட்பாடுகளும் ஆங்காங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. கடும் பனிக்குளிர் மற்றும் கரடுமுரடான இமாயல நிலப்பரப்பில் பிட்சுக்கள் மற்றும் அங்கு வாழும் சாமானிய மக்கள் தங்களின் வாழ்வியல் முறைகளை எப்படி அமைத்துக்கொண்டனர் என்பது மிகவும் நேர்த்தியாக கூறப்பட்டுள்ளது.. திபெத்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த மதம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த புத்தகம் என் ஆர்வத்தை தூண்டியது.
Jeyamohan is a master storyteller. His fiction is steeped in deep knowledge of Indian philosophy, culture, and religion. In these works, he delves into the mystical dimensions of life—what some might call spirituality, mysticism, or religion. That which is ineffable, accessible only to a few through experience, is rendered with beauty and lucidity in his narrative.
His descriptions—especially of Tibet, its monasteries, and its rugged landscapes—are nothing short of cinematic. There is an astonishing level of detail about Tibetan Buddhism, its philosophy, and its Tantric traditions. One can’t help but wonder: Did the author really travel to all these places? The writing feels so vivid, so immersive, that it’s easy to get lost in those sentences. They’re that well written.