Jump to ratings and reviews
Rate this book

தனிமையின் புனைவுக்களியாட்டு

அந்த முகில் இந்த முகில்... [Andha Mugil Indha Mugil...]

Rate this book
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு.

கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.
-ஜெயமோகன்

120 pages, Kindle Edition

First published January 1, 2021

3 people are currently reading
23 people want to read

About the author

Jeyamohan

211 books849 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
25 (54%)
4 stars
16 (34%)
3 stars
4 (8%)
2 stars
0 (0%)
1 star
1 (2%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Kavin Selva.
47 reviews2 followers
April 25, 2025
Author : Jeyamohan (ஜெயமோகன்)

"கனவல்லவா அன்பே,

இரண்டு முகில்களையும் ஒன்றாக்குகிறது?"

முகில் - மேகம்

______

Excerpt from novel:

“எச்சில் என்கிறீர்கள்?” அவள் முகம் கடும் குரோதம் கொண்டதுபோல ஒரு கணம் தோன்றியது.

“ஆமாம்” என்றேன், வஞ்சத்துடன் தீர்மானத்துடன் என் குரல் ஒலித்தது.

ஆனால் அதைச் சொன்னதுமே என் உள்ளம் உருக ஆரம்பித்தது. அது நான் உத்தேசித்தது அல்ல. அது என்னுள் வேறெங்கோ இருந்து வந்தது. அதை நான் ஏதோ ஒரு ஆங்காரத்தால் வெளியே எடுத்தேன். வேண்டுமென்றே நான் அந்த அழகிய தருணத்தை அழித்துக்கொண்டேன். இனி மீளவே முடியாதபடி ஒன்றை உடைத்துவிட்டேன்.




----------

Review:

சினிமா பின்னணியில் கட்டமைக்கப்பட்ட ஒரு கதை. ஒரு ஆண் மனம், ஒரு பெண் மனதின் முன் மண்டி இருந்து, தனது தேடலை பெருக்கிக்கொண்டு செல்கிறது. ஒருபுறம் அது அவளை நெருங்கிக்கொள்கிறது; மற்றுபுறம், அதே வேகத்தில் தொலைவுக்கே செல்லுகிறது.

ஒரு கன நேரத்தில் உமிழ்ந்த உறவு, எங்கேயோ பலவகையாக விரிந்துவிட்டு, காலத்தோடு அழிந்து விடுகிறது.

முகில் போல அந்த தருணத்தில் அழகும் இல்லை; அந்தச் சிறிய கணத்தில் கண் விட்டு மறைவதும் இல்லை.

இந்த உலகில் நாம் சந்திக்கும் ஒருவர், அந்த நேரத்தில் காணும் முகில்கள் தானா?

ஏனோ அந்த நேரத்தில் சரியாக படுவது, இன்னொரு தருணத்தில் தோல்வியின் முனைவில் நிறுத்துகிறது.

உங்கள் வாழ்வில் ஒரு சிலர், சினிமா காட்சி போல வந்து மறைந்திற்பார்கள். ஆனால், அவர்களை வாழ்நாள் முழுக்க காட்சியாக நம் மனம் விரித்து கொண்டே இருக்கும். அதற்கு ஒரு சாட்சி இந்த நாவல்.


ஜெயமோ உலகிற்கு செல்ல விரும்புபவர்கள், இந்த குறு நாவலை படிக்கலாம்.
184 reviews17 followers
April 3, 2024
This novel is an exquisite story on ever lasting love. A dream like love blossoms between a costume designer and a Junior artist while working for a epic blan and white telugu movie in the past. The narattor looks back at this encounter and through him we come to know of this beautiful love.Although they are separated for ever the memory, the love lasts in them forever. They both obsessively see the movie to feel that time again and again. Everything has changed but that movie has captured their love in timelessness. Although the narrator becomes a successful businessesman and is married to someone else, has children through them. This love remains in him, eternally. Its a beautiful story. I read it many times.
Profile Image for Suba Mohan.
105 reviews3 followers
February 9, 2023
இந்த நாவல் ஆசிரியர்க்கு தெரிஞ்ச ஒரு உண்மையான வாழ்க்கையோட புனை வடிவம்.

Mostly காதல் கதைகள்ல வர ஹீரோயின் virgin-ஆ இருப்பா. ஆனா இந்த கதையில வர ஹீரோயின் பல பேரால sexually use பண்ணப்பட்ட பொண்ணா சித்தரிச்சு இருப்பாரு ஆசிரியர். அது இந்த கதையை unique-ஆ காட்டுது.

அந்தக்கால சினிமா எப்படி எடுத்தாங்க, lights எப்படி use பண்ணாங்க, colour contrast-லாம் எப்படி வைப்பாங்க, dress colours எப்படி choose பண்ணாங்க, நிழல் படாம இருக்க என்ன மாதிரி techniques use பண்ணனும் இப்படி நெறைய விஷயங்களை பத்தி இந்த புத்தகத்துல சொல்லி இருக்காரு.

இந்தக் கதையில எனக்கு புடிச்ச இடங்கள் - ஹம்பியில் இருந்து ராஜமுந்திரி போற பயணத்துல நடக்குற நிகழ்ச்சிகள் அப்புறம் climax. இந்த புக்கோட கவர் அழகா இருக்கு. மொத்தத்துல இந்த கதை more than a drama less than a love story-னு சொல்லலாம்.
This entire review has been hidden because of spoilers.
6 reviews
October 16, 2023
"ஶ்ரீபாலாவை பார்த்த பிறகு உங்களால் அவளை காதலிக்காமல் இருக்கமுடியாது.
ஆனால், அக்காதல் சிலருக்கு அவள் நடு இரவில் கதவை தட்டி 4 குண்டர்களிடம் இருந்து தப்பி வந்த கதையை சொல்லும்வரை இருக்கலாம். அல்லது ஹோஸ்பேட் பேருந்துநிலையம் வரை இருக்கலாம். இல்லையேல் ராஜமந்திரியில் அவளை கடைசிமுறை பிரியும்வரை இருக்கலாம். ஆனால் மோட்டூரி ராமராவ் (கதாநாயகன்) அதன்பிறகுதான் அக்காதலின் பித்து நிலைக்குச் செல்கிறான்." நாவலின் இறுதியில் ஶ்ரீபாலா ஏன் கடைசிமுறை அவனை திரும்பிபார்க்காமல் சென்றாள் என்பது தெரியும்போது உண்மையில் காதலென்பது அந்த தருணம்தான் என்று புரிகிறது!
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Chelian Sundaram.
62 reviews3 followers
December 31, 2025
Very short but engaging story from Jeyamohan. Unlike most of his works, this is a very quick read but still impactful.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.