Jump to ratings and reviews
Rate this book
Rate this book
கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.

390 pages, Kindle Edition

Published June 29, 2021

33 people want to read

About the author

Jeyamohan

211 books849 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (48%)
4 stars
9 (29%)
3 stars
5 (16%)
2 stars
0 (0%)
1 star
2 (6%)
Displaying 1 - 7 of 7 reviews
252 reviews33 followers
August 4, 2024
புத்தகம் : கதாநாயகி
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள் : 353
நூலங்காடி: பனுவல்
விலை : 400

🔆 மெய்யின் பிள்ளை எஸ்எஸ்எல்சிக்கு பிறகு டீச்சர் ட்ரைனிங் முடித்துவிட்டு, துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். மலையில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு கோரனின் உதவியோடு அக்கறை பங்களாவிற்கு சென்றான்.

🔆 அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்க நினைத்தான்.

🔆 அவர் தங்கி இருந்த பங்களாவில் இருந்து ஒரு பழைய புத்தகம் கிடைத்தது. 200 ஆண்டுகள் பழமையானது வேட்டைக்கு வந்த சில ஆங்கில அதிகாரிகள் புலி அடித்த இறந்ததாக பதிவேட்டிலிருந்து இருந்தது . ஆனால் அது உண்மையல்ல. அதன் கதையை புத்தகத்தில் இருந்து வெளியே வந்த, ஹெலனாவை கூற ஆரம்பித்தாள். மெய்யின் மனப்பிறழ்வு அடைந்தான். பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான். அதன் பின் என்ன நடந்தது என்பதே "கதாநாயகி" . மிகவும் பிடித்த புத்தகம்.


🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - எட்டாவது புத்தகம் இது.


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Srihari Iyer.
42 reviews
May 22, 2024
ஆதிவாசி மக்கள் இருக்கும் இடத்திற்கு ஆசிரியராக வரும் மெய்யன் பிள்ளை அங்கு ஒரு பழைய பிரிட்டிஷ் கால மாளிகையில் தங்குகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே கதை இருகொணங்களில் பயணிக்கிறது. ஒன்று ஆசிரியராக அங்கு இருக்கும் குழந்தைகளை வைத்து பள்ளி நடத்துவது, மற்றொன்று உலச்சிதைவால் ஒரு மாய உலகிற்கு (பேய் உலகம்) ஒரு புத்தகம் மூலமாக செல்கிறது.

முதல் கோணம் இறுதிவரை நன்றாக செல்கிறது. ஆதிவாசி குழந்தைகளின் வாழ்க்கை, அவர்களை பள்ளிக்கு வரவைக்கும் முயற்சிகள், கோரன் என்ற ஒரு உதவியாளர் மற்றும் அருகில் சிருகிராமம் பற்றிய தகவல்கள் மற்றும் விளக்கங்கள் மிகவும் ஈர்க்கும் படி இருந்தது.

இரண்டாம் கோணமும் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் மன ஓட்டத்தில் விவரித்து சென்று, பின்பு அந்த கோணம் விஸ்தாரம் ஆகும் பொழுது நின்று நிதானமாக படிக்க வேண்டி இருக்கிறது.

இரண்டாவது கோணம் ஒரு பேய் கதையா இல்லை உளவியல் சிக்கலா என்று புரியாமல் நீண்ட நேரம் படிக்கும் பொழுது வாசிப்பில் சிறிது தொய்வு ஏற்படுகிறது.

இந்த நாவலில் முக்கிய பகுதியாக நான் பார்ப்பது இறுதி அத்தியாயத்தில் விவரித்து இருக்கும் உலசிக்கள் பற்றியது தான். உலசிக்களை பற்றி புரிந்து கொள்ள கடைசி அத்தியாயம் எனக்கு நன்கு உதவியது.
This entire review has been hidden because of spoilers.
18 reviews
March 3, 2025
எழுத்துக்களில் மட்டுமே வாழும் கதாநாயகி.
பல்வேறு அடுக்குகள் கொண்ட ஜெயமோகனின் ஒரு நல்ல கதை. இங்கிலாந்து சீமாட்டிகளின் வாழ்க்கையும் ஆதிவாசி வாழ்க்கையும் நடுத்தர ஆணின் வாழ்க்கையும் கிரேக்க கால நாடகத்தில் காட்டப்பட்ட வாழ்வியலையும் உளசிக்கல் கொண்டவனின் வாழ்க்கையும் இணைந்து ஒன்றோடு ஒன்று பின்னிய கதை.

மெய்யப்பன் பிள்ளை மலைவாழ் கிராமத்தில் ஆசிரியராகவும் பழைய ஆங்கிலேயர் கட்டிய பங்களாவில் தங்கும் போது படிக்கும் புத்தகத்தில் வரும் கதாநாயகி உடன் நடக்கும் நிகழ்வுகளில் என இரு வேறு உலகத்தில் அமைந்த கதை...


எந்த அமானுஷ்ய விஷயமாக இருந்தாலும் அதை மனதிலோடு நிறுத்துவதற்கு ஒரு தர்க்க ரீதியான விளக்கம் தேவைப்படும் என்று ஜெயமோகன் புத்தகத்தில் சொல்லியது போலவே கதாநாயகி வருவதும் இறுதி பக்கங்களில் உளச்சிக்கலோடு தர்க்கமயமாக்கப் பட்டுள்ளது.

ஆதிவாசி பிள்ளை துப்பன் ஒவ்வொரு எழுத்தையும் அதன் உருவத்தோடு பார்க்கும் விதம் நன்றாக இருந்தது, உதாரணமாக எ என்பது நாய்..

கௌரவத்திற்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதை பெண்கள் எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதும் நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது.


புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த வரிகள்:

‌இந்த உலகில் இந்த உலகின் பொருட்டு வாழ்வதைப் போல அபத்தமானது வேறு ஏதும் இல்லை.

கோமாளிக்கு உலகை கோமாளியாக ஆக்கும் உரிமை இருக்கிறது.

அப்பட்டமான பொய்கள் கற்கள் போல. அவை முளைப்பதில்லை. அரையுண்மைகளே விதைகள். அவையே மாபெரும் பொய்கள்

ஏனென்றால் பொய்யே பெண்ணின் ஆயுதமாக இருக்க முடியும். பொய் என்பதை பெண்ணின் உண்மை என்று கொள்ளுங்கள். பெண்ணின் உலகமே உங்கள் பொய்களால் ஆனது என்று கொள்ளுங்கள். பொய் சொல்லும்போதே பெண் உண்மையான விடுதலையை அடைகிறாள். பொய்சொல்லும் பெண் ஆற்றல் கொண்டவளாகிறாள். பொய் சொல்லும்போது பெண் அத்தனை ஆண்களுக்கும் மேலே ஒரு பீடத்தில் அமர்ந்துகொள்கிறாள். தோற்கடிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் அவள் வெற்றிகொண்டவளாகிறாள்.


அச்சமூட்டக்கூடிய எந்த அனுபவத்திலும் அதை எப்படி விளக்கி நாம் ஏற்கனவே கொண்டிருக்கக்கூடிய உலக உருவகத்துடன் பொருத்திக்கொள்வது என்பதில்தான் நம்முடைய அகத்தின் பதற்றம் இருக்கிறது. எந்தப் புதிய அனுபவமும் அச்சமூட்டுவது அதனால்தான் ஏற்கும்படி ஒரு விளக்கம் கிடைத்தவுடனேயே அச்சம் மறைந்து ஆறுதல் உருவாகிவிடுகிறது.

உண்மையால்தான் முன்பிலாத ஒன்றாக திகழமுடியும். பொய்யென்பது முன்பிருந்த ஒரு உண்மையின் மறுநிகழ்வாகவே இருக்க முடியும்.

ஒருமாதம் கழித்து நினைவுகூரும்படி ஒருநாள் இருந்தால் அதில்தான் மெய்யாகவே வாழ்கிறோம்.

சாவின் அருகாமை இல்லாத எதுவும் ஆழமும் தீவிரமும் கொள்வதில்லை. ஒருகணம் தவறினால் சாவு என்றிருக்கையிலேயே நாம் நம்மை முழுமையாகத் தொகுத்துக் கொள்கிறோம்

மெய்யும் பொய்யும் எல்லை அழிவது போல அனைத்தையும் சிதறடிப்பது வேறில்லை.

காட்டில் எவரும் காட்டைப் புரிந்துகொள்ளாமல் வாழ முடியாது. ஒரு
நகரத்தை புரிந்து கொள்வதற்கு அறிவும், தொடர்ந்த கவனமும், கல்வியும் தேவை.காட்டை
நம் அறிவு புரிந்து கொள்ளவில்லை. உள்ளுணர்வுதான் புரிந்துகொள்கிறது.

கட்டுப்படுத்தப்படாத எண்ணங்கள் நம்மை ஆக்ரமித்துவிடுகின்றன. உண்மையில் பேய் என்பது அதுதான்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Parthasarathy Rengaraj.
72 reviews1 follower
May 20, 2023
Christopher Nolan type story I can say or the kind he will make a film surely if he reads this one

The author goes inside your mind to a depth, it is an influential storyline

Psycho thriller with some mix of paranormal or time travel, oh god, can’t say, one has to experience it!!

The other side
Portrait of “ How British were at their home when thae were ruling India” , the so called upper class and their hypocrisy

Blunt truths of home slaves landing India as rulers.



19 reviews1 follower
December 2, 2025
கதாநாயகி

சிறுகதைகளை, நாவல்களை அல்லது அவற்றில் வரும் பாத்திரங்களை வேறொரு கலைப் படைப்பாக உருமாற்றம் செய்யும்போது ஏற்படும் அனுகூலங்களும் சிக்கல்களும் அனைவரும் அறிந்ததே ஆனால் மேற்கண்ட படைப்புகள் / கதாபாத்திரங்கள்  இன்னொரு சிறுகதைக்குள்ளோ நாவலுக்குள்ளோ  உயிர்த்தெழும்போது கிடைக்கும் வாசிப்பின் கூர்மை அலாதியானது, அனுபவிக்க வேண்டியது. அதே சமயம் எந்தச் சிக்கலும் இல்லாமல் அந்த அனுபவத்தைத் தர படைப்பாளி கூடுதல் உழைப்பைத் தந்து கூடுதல் வாசக மனநிலையை அடைய வேண்டும். அந்தப் பிரயத்தனங்களை வெளிக்காட்டும் படைப்பு ஜெமோவின்  'கதாநாயகி'. அடர்ந்த காடு நிறைந்த மலைப்பகுதியில் தொடங்குகிறது நாவல். அங்கு ஆசிரியப் பணிக்கு செல்லும் நாயகன் படிப்பதற்காக இன்னொரு நாவல் ஒளிந்திருக்கிறது.  நாவலை வாசிக்க ஆரம்பித்ததும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் உயிர்த்தெழ ஆரம்பிக்கின்றன. காட்டுப் பங்களாவுக்குள் தனியறைக்குள் இருப்பவனிடம் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த பெண்கள் பேச ஆரம்பிக்கின்றனர். பழங்குடி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவனோடு இன்னொரு நாவலின் ஆசிரியரான ஃபேன்னி பர்னி,அந்நாவலின் கதை நாயகியான ஈவ்லினா, கதைக்குள் பேசப்படும் இன்னொரு      தொல்கதாபாத்திரமான விர்ஜினியா, அக்கதைகளை வாசிக்கும் ஹெலோனா என நான்கு பெண்கள் வாழத் தொடங்குகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் வேறு வேறு கதை; வேறு வேறு சூழல்;வேறு வேறு உணர்ச்சிகள் ;வேறு வேறு நீதி கிட்டத்தட்ட அவன் மனநிலை மோசமடையும் நிலைக்கு நிகழ்வுகள் நடக்கின்றன. சமயத்தில் வாசிப்பவருக்கும் ஏற்படும் சில குழப்பங்கள் மீள் வாசிப்பை கோருகின்றன. இருந்தும் ஜெமோவின் எழுத்தில் அடிக்கடி வரும் தெறிப்புகள் தொய்வில்லாமல் பக்கங்களை நகர்த்துகின்றன.

உதாரணத்திற்கு பொதுவாக சிற்றூரில் வசிக்கும் பெண்கள் எதுவும் தெரியாதவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள் என்ற பொது புத்தி இருக்கிறது. ஆனால் ஜெமோ ஓரிடத்தில் " இந்த ஊரின் எளிமையான பெண்ணைக் கடவுள் எடுத்துக் கொண்டு சென்று அவள் உள்ளத்தை வெட்டி ஆராய்ந்தார் என்றால் அங்கே ஆயிரம் சாத்தான்களும் பல்லாயிரம் பேய்களும் நடனமாடிக் கொண்டிருப்பதைக் காண்பார். லண்டன் நகரையே மூடிவிடும் அளவுக்கு சாக்கடைப் பெருக்கு ஒன்றைக் கற்பனை செய்யுங்கள். அதுதான் இங்குள்ள ஒரு பெண்ணின் உள்ளம். ஏனென்றால் அது பாவத்தை உடலால் செய்ய வாய்ப்பே அமையாத துரதிர்ஷ்டம் கொண்டது." என்பார்

மின்சாரத்தில் பூத்த பூ அவ்வளவு வெளிச்சம் தருகிறது என்று விளக்குகளையும் ன, மழை வரும் போது நீரில் நீர் விழுந்து தெளிப்பது நீராலான சிறிய நாற்றுகள் என்பதும், வன்மம் கொண்ட பார்வையைச் சொல்லும் போது கண்களில் ஒரு கண்ணாடி துண்டை திருப்பியது போல என்பதும்,பழங்குடி ஒருவன் எழுத்துக்களுக்கு பயன்படுத்தும் உருவங்களையும் கடக்கும்போது மெலிதாக ஒரு புன்னகை பற்றிக் கொள்கிறது.

மற்றபடி இந்த நாவலில் இருந்து என்ன எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கையில் அதையும் ஜெமோவே நாவலின் மையத்தில் சொல்லி விடுகிறார்.
"எஞ்சவிட்டுச் செல்வதில் மிகச்சிறந்தது கதைதான். அது அழியாமல் நீடிக்கும்.  கதையாக மாறிய முத்துப்பட்டனும் மாயாண்டிச் சாமியும் இன்றும் கோவிலில் அமர்ந்திருக்கிறார்கள்.  கதையை எழுதி வைத்தால் என்றும் இருக்கலாம்.ஷேக்ஸ்பியர் அழியவில்லை. அவரால் எழுதப்பட்டவர்களும் அழியவில்லை. காரியம் ஒரியும் அழியவில்லை. கபிலரும் பரணரும் வாழ்கிறார்கள். கதைகள் எல்லாம் நினைவுச் சின்னங்கள். எல்லா நூல்களும் கல்லறைகள் தான். அவற்றில் இறந்தவர்கள் அடக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒருவர் மேல் ஒருவர் என. ஒருவருடன் ஒருவர் பிணைந்து அடுக்கடுக்காக. அவர்கள் ஒரு தொடுகைக்காக காத்திருக்கிறார்கள். கண்விழித்து புன்னகைக்கிறார்கள். நீண்ட நாள் காத்திருப்பு போல பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் நம்மை எடுத்துக் கொள்கிறார்கள். நம் உலகை ஆக்கிரமித்து தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்களுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களைத் தொட்டு எழுப்பி விட்டோம் என்றால் நாம் நம் உலகை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்ற பொருள்.".

வேறென்ன எடுத்துக்கொள்வது.

சின்னத் தொடுதல் ...கொஞ்சம் ஆழ்ந்த தொடுதல்...
Profile Image for Amruth PANDIRAJAMANICKAM.
2 reviews
September 18, 2025
After reading this, the questions that kept coming inside my mind was how he( Jayamohan) did this , how he imagined this insanity of a person and the way he has integrated two novels together was mind blowing, no wonder he is a master.
In this work( within my knowledge ) he has used the craft in a way only a master can use.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.