Jump to ratings and reviews
Rate this book

ஒரு மரம் பூத்தது - கலைஞர் மு. கருணாநிதி

Rate this book
ஒரு மரம் பூத்தது - கலைஞர் மு.கருணாநிதி

ஓ. ஹென்றி எழுதிய Last Leaf (கடைசி இலை) எனும் புத்தகத்தை தழுவி கலைஞர் எழுதிய புனைவு “ஒரு மரம் பூத்தது.”

Unknown Binding

4 people want to read

About the author

Mu. Karunanidhi

26 books14 followers
Muthuvel Karunanidhi (மு. கருணாநிதி) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He had the longest tenure as Chief Minister of Tamil Nadu with 6,863 days in office. He was also a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. He also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as "Kalaignar" (கலைஞர்) (Artist) and "Muthamizharignar" (முத்தமிழறிஞர்) (Tamil Scholar) for his contributions to Tamil literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rajarajan RJ.
69 reviews6 followers
July 12, 2021
ஒரு மரம் பூத்தது - கலைஞர் மு.கருணாநிதி

ஓ. ஹென்றி எழுதிய Last Leaf (கடைசி இலை) எனும் புத்தகத்தை தழுவி கலைஞர் எழுதிய புனைவு “ஒரு மரம் பூத்தது.”

நம் ஊருக்கு ஏத்தபடி இந்த கதையை அமைத்திருப்பார். பாபு எனும் சிறுவன். அவனது தாய் தேவகி. தேவகியின் காதல் கணவன் திவாகர் இறந்துவிடுகிறார். இளம் கைம்பெண் தேவகி மீது சபல கண்கள் வைக்கும் ஆண்கள் இந்த கதைமுழுவதும் வருகிறார்கள். அவர்களோடு தேவகி போராடிக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையே, பாபுவிற்கு காய்ச்சல் ஏற்படுகிறது. அந்த காய்ச்சலில், அவன் வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தை தினமும் பார்க்கிறான். அந்த மரத்தில் இருந்து ஒவ்வொருநாளும் ஒரு பூ உதிர்ந்து விழுகிறது. கடைசி பூ உதிரும் போது நான் இறந்துபோய்விடுவேன் என்கிறான் பாபு. இதை ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தேவகி, பாபு தினமும் இதையே சொல்வதை கேட்டதும், பூக்கள் உதிர்ப்பதை பார்த்ததும் பயப்படுகிறார்.

கலைஞரின் படைப்புகள் அனைத்திலும் நவீன மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார் என்பதை அவரது சிறுகதைகளை படித்தபோது உணர்ந்திருக்கிறேன். அதேபோல, இக்கதையிலும், ஒரு டாக்டர் வருவார். பாபுவிற்கு ஏற்பட்டிருப்பது சாதாரண காய்ச்சல் தான் என்று மருந்துகளை தருவார். அவரே, பாபுவுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை, அவனது பயம் தான் ஒரு வித மன பிரச்சனையாக மாறி இருக்கிறது. பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்வார்.

இதற்கிடையே, தேவகி மீது ஆசைப்படும் ராதாகிருஷ்னன், ஒரு ஏமாற்று மந்திரவாதி என சில கதாபாத்திரங்கள் வருகிறது. ஓவியர் ரகு என்பவனுக்கு தேவகி மீது காதல் இருக்கிறது. ஆனால், தேவகி அவனையும் எல்லா ஆண்களை போலவே முதலில் பார்க்கிறாள்.

தேவகிக்கும் ரகுவுக்கும் காலப்போக்கில் காதல் மலர்கிறது. ஒரு கொலைவழக்கில் ரகு சிறைக்கு செல்ல நேருகிறது. தேவகிக்கு போட்டோகிராப்பர் ராதாகிருஷ்ணனால் தொல்லை நேருகிறது.

சிறையில் அவன் சந்திக்கும் மாணிக்கம் என்பவனிடம் ரகு தனது கதையை சொல்கிறான். சிறையில் இருந்து வெளியே வரும் மாணிக்கம், தேவகியை கண்டதும் அவளை அடைய நினைக்கிறான். மாணிக்கம் உண்மையில் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரன், கொலைகாரன் என்பது ஊரில் யாருக்குமே தெரியாமல் இருக்கிறது. தேவகியை மாணிக்கம் கடத்தி செல்கிறான்.

தேவகியை மாணிக்கத்திடம் இருந்து ரகு எப்படி மீட்டான்?
பாபு தினமும் பார்த்த மரத்தில் இருந்து கடைசி பூ விழுந்ததா?
பாபு தேவகி - ரகுவை ஏற்றுக்கொண்டானா?

என்பது தான் மீதிக்கதை.

ஒரு எளிமையான கதையை சுவாரசியம் குறையாமல், அதே நேரத்தில், முற்போக்கு கருத்துக்களுடன் கலைஞர் எழுதி இருக்கிறார்.

புத்தகத்தின் பின்னிணைப்பாக ஓ. ஹென்றியின் கடைசி இலை கதையையும் கொடுத்து இருப்பது சிறப்பு.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.