Jump to ratings and reviews
Rate this book

வெள்ளிக்கிழமை - கலைஞர் மு. கருணாநிதி

Rate this book
வெள்ளிக்கிழமை - கலைஞர் மு. கருணாநிதி

1983 ல் புத்தகமாக வெளியான கலைஞர் எழுதிய புதினம் “வெள்ளிக்கிழமை”.

புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் கலைஞர் இப்படி குறிப்பிடுகிறார்..

“சமூகத்தின் அபாயகரமான சூழலில் சிக்கித்தவித்த ஒரு குடும்பத்தின் கதை இது! சமுதாய அமைப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களால் பாதிக்கப்பட்டுவிடும் மாந்தரில் சிலரே இந்தக் கதையை கொண்டு செல்கிறார்கள்!

இதோ இந்த நூல் உங்கள் கையில் இருக்கிறது - நீங்களே படித்து முடித்துவிட்டு நமது சமுதாய அவலத்தை எண்ணிப் பெருமூச்சு விடப் போகிறீர்கள்” என்றுக் குறிப்பிட்டு இருக்கிறார்.

புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது இந்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Unknown Binding

Published January 1, 1983

8 people want to read

About the author

Mu. Karunanidhi

26 books14 followers
Muthuvel Karunanidhi (மு. கருணாநிதி) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He had the longest tenure as Chief Minister of Tamil Nadu with 6,863 days in office. He was also a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. He also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as "Kalaignar" (கலைஞர்) (Artist) and "Muthamizharignar" (முத்தமிழறிஞர்) (Tamil Scholar) for his contributions to Tamil literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Rajarajan RJ.
69 reviews6 followers
July 12, 2021
வெள்ளிக்கிழமை - கலைஞர் மு. கருணாநிதி

1983 ல் புத்தகமாக வெளியான கலைஞர் எழுதிய புதினம் “வெள்ளிக்கிழமை”.

புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் கலைஞர் இப்படி குறிப்பிடுகிறார்..

“சமூகத்தின் அபாயகரமான சூழலில் சிக்கித்தவித்த ஒரு குடும்பத்தின் கதை இது! சமுதாய அமைப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களால் பாதிக்கப்பட்டுவிடும் மாந்தரில் சிலரே இந்தக் கதையை கொண்டு செல்கிறார்கள்!

இதோ இந்த நூல் உங்கள் கையில் இருக்கிறது - நீங்களே படித்து முடித்துவிட்டு நமது சமுதாய அவலத்தை எண்ணிப் பெருமூச்சு விடப் போகிறீர்கள்” என்றுக் குறிப்பிட்டு இருக்கிறார்.

புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது இந்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான கதை. வெளிவந்த காலத்தில் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்திய கதையாக இது இருந்திருக்கும்.

சிந்தாமணி என்னும் இளம்பெண்ணை கொண்டு தான் கதை தொடங்குகிறது. சிந்தாமணி, சிவநேசர் எனும் தீவர சனாதனிக்கும், சிவகாமி எனும் தாய்க்கும் பிறந்த அழகான பெண். தீவிரமாக நாள், நட்சத்திரம் என அனைத்து வைதீக புரட்டுகளையும் நம்புபவர் சிவநேசர். அந்த வெள்ளிக்கிழமை சிந்தாமணியை பெண் பார்க்க பெங்களூரில் இருந்து அழகப்பன் எனும் இளைஞன் வருகிறான். இருவருமே புகைப்படத்தை பார்த்து ஒருவரையொருவர் பிடித்துப்போய் ஆவலுடன் சந்திக்க இருக்கிறார்கள். அதற்குள் ஏற்படும் அசம்பாவிதங்கள். அதற்கு காரணமாக அந்த ஊரின் போக்கிரி “ராமகிருஷ்ணன்” என்கிற “டைகர்” இருக்கிறான். அவனது மிரட்டலால் அவனுக்கு உதவும் டாக்டர் ஆனந்தி. ஆனந்தியின் வாழ்வை சீரழித்த ஊரின் பெரிய மனுசன் “பாலகங்காதர தேவர்”, அழகப்பனுடன் பெங்களூரில் இருந்து உடன் வரும் அவனது தோழன் “நயினா முகமது” என நிறைய கதாப்பாத்திரங்கள் வருகிறது.

கலைஞரின் சிறுகதைகளில் அவர், பெண்களை மையப்படுத்தி, பெண்களின் பிரச்சனைகளை முன்னுறித்தி பல கதைகளை எழுதியிருப்பார். அதுப்போல, இந்த “வெள்ளிக்கிழமை” புதினமும், சிந்தாமணி, ஆனந்தி ஆகிய இருப்பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் எப்படி பார்க்கிறது, புரிந்துக்கொள்கிறது, பாடாய் படுத்துகிறது என்பதைத் தான் இக்கதையில் கலைஞர் காட்டுகிறார்.

இந்தக்காலத்தில், இக்கதையை வாசிக்கும் போது, நல்லவர்களாக காட்டப்படும் ஆண்கள், பெண்களை புரிந்துக்கொள்ள முடியாத இத்தனை முட்டாள்களா? இவ்வளவு முதிர்ச்சி அற்றவர்களா? என்றும்

இன்னொரு பக்கம், கெட்டவர்களாக காட்டப்படும் ஆண்கள், இத்தனை கொடுமையானவர்களா? ஒரு பெண்ணை அடைய எதையும் செய்யக்கூடியவர்களா? என்கிற கேள்விகள் எழுகிறது.

இன்னமும் இப்படியாக ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

38 ஆண்டுகளுக்கு முன்னால், கலைஞர் இதை எழுதிய போது இருந்த சமூகத்திற்கும், இப்போது இருக்கும் சமூகத்திற்கும் இருக்கும் வித்தியாசம், இன்றைய பெண்கள், சிந்தாமணி-ஆனந்தி போல இல்லாமல் தங்களுக்கான நீதியை தைரியமாக உடைத்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான். இந்த மாற்றங்களுக்கு பின்னாலும் கலைஞரின் கையெழுத்துகள் இருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது!

இன்று, கலைஞர் இந்த கதையை எழுதி இருந்தால், கதையின் போக்கை சற்று மாற்றியிருப்பார் என தோன்றுகிறது. ஏனெனில், சமூகமும் மாற தொடங்கி இருக்கிறது. இன்னும் நிறைய மாற வேண்டும்!

- ராஜராஜன் ஆர்.ஜெ
11-ஜூலை-2021
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.