கவிதை வாசிப்பு, கவன குறைவுக்கு ஒரு சரியான மருந்து எனலாம்.
கவிஞன் அவன் சூழலை ரசித்து, சமூகத்தை வெறுத்து, காதலைக் கரைத்து எழுதியதை, வாசிப்பவர்களின் சிறிய கவனச் சிதறலும் தவறான அர்த்தத்தை கொடுக்கும்.
நான் வாசித்ததில் எனக்கு பிடித்த மீண்டும் மீண்டும் வாசிக்கிற கவிஞர்கள், கலீல் ஜிப்ரானும், இரபீந்திரநாத் தாகூரும், காரணம் இவர்கள் இருவரின் படைப்புகளும், விவிலியத்தின் வாசகங்களும், மகாபாரத கருத்துக்களும் ஒரு சேர ஒலிப்பது போன்ற பிம்பம் கொண்டது (இது என்னுடைய சொந்த கருத்து).
அதுபோல கவிதை நூல்கள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்தங்களை தரவல்லது.,
"பட்டாம்பூச்சி விற்பவன்"
இதில் நா. முத்துக்குமார், தன்னைச் சுற்றி நிகழ்ந்தவைகளையும், நிகழ்பவைகளையும், வண்ணக் கனவுகளையும், விழைவுகளையும், இவை அனைத்தின் அழகியல்களையும் தனது பாங்கில் தந்துள்ளார். மற்றப்படி கவிதைகளின் விமர்சனங்களோ, புத்தகத்தைப் பற்றிய விரிவாக்கமோ தேவை இல்லை எனக் கருதி இதை முடிக்கிறேன்.
காரணம் தெரியவில்லை, மற்ற புத்தகங்களை விட கவிதை புத்தகங்களின் விலை மலிவு.
சற்றே முயலுங்கள்.