இக்கதையின் நாயகன் வம்சி கிருஷ்ணா, புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவன்... ஒரு விபத்தில் தன் மனைவியை இழந்தவன்... எல்லோரும் அவள் இறந்துவிட்டதாக கூற... அதனை நம்ப மறுக்கிறான். சுழ்நிலையினாலும், தன் குழந்தையின் நலன் காரணமாகவும் மனமில்லாமல் மறுமணம் செய்ய ஒப்புக் கொள்கிறான்...தனக்கு நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளை திருமணத்திற்கு முதல் நாள் ஒரு விபத்தில் இறந்து விட அதற்கு காரணம் தன்னுடைய ராசி தான் என உற்றாரும் உறவினர்களும் தூற்ற அதனால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கும் நாயகி ப்ரியம்வதா... (திருமணத்தை தவிர்க்க அவள் உடல் நிலையும் ஒரு காரணம்) தன் தந்தைக்காக திருமணத்திற்கு சம்மத்திகிறாள்...இப்படி திருமணத்தில் விருப்பம்
கதை மிகவும் அருமை. வம்சி, ப்ரியம்வதா காதல் அருமை.நல்ல உணர்வுபூர்வமான கதை. குழந்தைஅம்முப்ரியாவிடம் தாய்பாசம் உணர்வு அருமை. அடுத்த கதையை சீக்கரம் எதிர்ப்பார்க்கிறோம். அனைவரும் படிக்கலாம். நன்றி, வணக்கம்.