வாஸந்தி, தியாகராஜன், அபிஷேக், மூவரும் தத்தமது எண்ணத்தில் மூழ்கி இருந்தாலும், விவேக்கின் வார்த்தைக்கு பதில் முதலில் அபிஷேக்கிடம் இருந்தே வந்தது. “உனக்கு ஆயுசு நூறு. இப்பதான் அங்கிளிடம் சொல்லிட்டு இருந்தேன். அது சரி, உங்க மாமா என்பதற்காக இப்படியா பத்து மணி நேரம் ஜிம்மில் இருப்பார் என்று அவருக்கு ஐஸ் வைப்பது? அவருக்கு ஜலதோஷம் பிரிக்கப் போகிறது” என்று விவேக்கின் முதுகில் தட்டிச் சிரித்தான். “கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில், காய்ச்சல் தலைவலி என்று எந்த டாக்டரும் இதுவரை பார்த்ததே இல்லை. நான் திருவண்ணாமலையில் கடந்த இருபத்தி மூணு வருஷமா ஜிம் வச்சு நடத்தி வருகிறேன். அது எனக்கு பொழுது போக்கு இல்லை. அதுதான் எனக்கு வேலை” என்று பெருமையாகச் சொல்ல மூவ