What do you think?

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக்
களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை. ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்து உண்மையான கலைத்தேடல்களுக்குச் செலுத்த இந்த விவாதங்களால் இயலும்.

175 pages, ebook
First published January 1, 2021
About the author
Jeyamohan
212 books884 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
July 18, 2022
Its mostly about how to read, what to read, its mostly about what is literature and how literature can be read.
July 14, 2023
இலக்கியம் சார்ந்த நண்பர்கள் வட்டம் இல்லாத அந்தரங்கமான வாசிப்பினை கொண்டவன் என்பதால் வாசிப்பு தொடர்பான பல கேள்விகள் எனக்குள் தேங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை களைவதற்கும் சிலவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் இந்நூல் உதவியது. இருபத்தொரு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கக்கூடியவையே.
January 23, 2024
புத்தகங்களை வாசிப்பவர்கள், கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தது இருந்தும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக பல தெளிவுகள் பெறக்கூடும்.
புத்தகங்களை வாசிப்பதனால் நமக்கு எழும் சில சந்தேகங்களும் தடைகளும் குழப்பங்களுக்கு எல்லாம் இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப்படும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை வாசகனிடத்தில் இருந்து வந்த கேள்விகளின் பதில்களாகத் தான் விளக்கியிருப்பார். இதில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் நம்முடைய மனதிலும் தோன்றி என்றைக்கோ மறைந்திருக்க கூடும் அதை இப்போது இதிலுள்ள கட்டுரைகளின் வாசிப்பில் தெளிவடையக்கூடும், அப்படித்தான் என்னுள் இருந்த குழப்பங்களும் தெளிவு கிடைத்தது.
உதாரணமாக ஒரு படைப்பை நாம் வாசித்து முடித்து, நாம் அப்படைப்பு வேறு ஒரு படைப்பின் சாயலில் தான் இருக்கிறது (அந்த படத்தை மாதிரி தான் இந்த படமும் இருக்கிறது) என்று கூறுவது இயல்பு. அப்படி ஒரு இலக்கிய படைப்பை விமர்சனத்திற்கு பொத்தாம் பொதுவாக கூறுவதை விட இவ்விரு படைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிதல் தான் ஒரு தேர்ந்த வாசகனின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இங்கு நான் சரியாக விளக்கி உள்ளேனா என்று தெரியவில்லை ஆனால் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது தெளிவடைவீர்கள்.
பொதுவாக எழும் கேள்விகளான எது இலக்கியம், மற்றவருக்கு புரிவது எனக்கே என் புரிவதில்லை, எழுத்தானுக்கு வாசிப்பு தேவையா, ரஷ்ய இலக்கத்தை வாசிக்கும் போது இருக்கும் சிக்கல், ஒரே எழுத்தாளரை வாசித்தல், பொருள் மயக்கம், இலக்கியத்தில் ஏன் விவாதங்கள் நடக்கிறது என பல்வேறு கேள்விகளுக்குள்ளான கட்டுரை இந்நூலில் உள்ளது. இதில் உள்ள பெரும்பான்மை கட்டுரைகள் அவருடைய இணையதளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை தான். ஓரிரு கட்டுரைகள் இந்நூலிற்கு என்று தனியாக எழுதியிருந்தார் போலும். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். தேடி வாசியுங்கள்.

September 19, 2024
தமிழ் இலக்கியம் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகள் மற்றும் வாசகர்கள் உடனான கேள்வி பதில்களின் தொகுப்பு.
நவீன கவிதைகள் ஏன் பலருக்கு புரிவதில்லை, அதற்கான காரணங்கள் என்ன மற்றும் அவற்றை அணுகும் முறைகள்.
பொது வாசகர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களின் வாசிக்கும் பாங்கு, குணாதிசயங்கள் மற்றும் விமர்சன முறைகள்.
ஒரு எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதன் முக்கியத்துவம்.
ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், மகாகவி பாரதியார் மற்றும் பல எழுத்தாளர்களைப் பற்றிய விவரிப்பு.
இலக்கிய படைப்புகள் மற்றும் இலக்கியம் அல்லாத படைப்புகளைப் பிரித்தறியும் உத்திகள், இலக்கியப் படைப்புகளின் கூறுகள் மற்றும் வாசகர் ஆழ்ந்து அறிய வேண்டிய நுண் கருத்துகள்.
ருஷ்ய இலக்கியங்களை வாசிக்கும் போது ஏற்படும் தடைகள் மற்றும் அதைக் கடந்து வரும் வழிகள்.
இலக்கிய அபிப்ராயம் சொல்லும் முறைகள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஏற்படும் பூசல்களைப் பற்றிய விவரிப்பு.
இவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு வாசகராக நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அதே சமயம் நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். என்னை தீவிரமாக யோசிக்க வைத்த புத்தகம் இது. பல படிமங்களாக இருக்கும் ஆசிரியரின் பதில்கள் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாக்குகிறது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தப் புத்தகத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இலக்கிய வாசிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு அருமையான புத்தகம்.

December 26, 2024
வணிக வாசிப்பாளர்களுக்கு இந்த புத்தகம் பயனில்லை.இந்த புத்தகம் முதல் படி இலக்கிய வாசகர்களுக்கும், இலக்கியம் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும். Tolstoy, Dostoevsky போன்ற பல உலக இலக்கிய ஆளுமைகள் படிப்பதற்கு சில வாசிப்பு வழிகள் இருக்கிறது. அதை எப்பிடி அணுகுவது என்று மிக தெளிவாக எழுதி இருப்பார். இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
Displaying 1 - 5 of 5 reviews