காதல் கதையை விரும்பும் வாசகர்களா நீங்கள்? அப்படி என்றால் நீல இரவில் நின் முகம் என்ற இந்த நாவல் நிச்சயம் உங்கள் மனதில் நீங்கா இடம் பெறும். ஆபத்தான கட்டத்தில் உதவிய முகம் அறியா ஒருவன் மேல் காதல் கொண்ட நம் நாயகி வசந்த நிலா. பெயரை போல வசந்தமும் நிலவினை போல ஈர்ப்பும் கொண்டவள். அவள் படித்த பள்ளிக்கு ஒரு நாள் செல்ல... அங்கேயே வேலைக்கு வருகிறாள் தற்காலிகமாக. அங்கு நம் நாயகன் ரகு நந்தன் கடுமையான முகம் கண்டு காரணம் அறிகிறாள். அவனின் காதல் தோல்வியை தெரிந்து கொண்டு வருந்த இரு வேறு பாதையாக செல்லும் இவர்கள் கதை எந்த புள்ளியில் இணைகிறது என்பதை அறிந்து கொள்ள வாங்கி படியுங்கள் நீல இரவில் நின் முகம்..