உலகை இயக்கும் எந்திரம் பயம் எனில் அதன் கருவி பொய்.இங்கு தேவைக்காக பொய் கூறுபவர்களை விட அன்புக்காக பொய் கூறுபவர்களே அதிகம். அன்பு,பாசம்,உறவு,மரியாதை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பொய்கள் பேச ஆரம்பித்தார்கள். அந்தப் பொய்கள் பழக்கப்பட்டு,அதன் சுவை பிடித்து பழகி போக நாக்கிலே ஊற தொடங்கி விட்டது.