ருக்மணியின் கணவர் எழுதி வைத்த உயிலினால்தான் பிரச்சினையே ஆரம்பமாகியது. கவிதாவுக்கு சொத்து சேரக்கூடாதென்று, கோபால், அவளை கொன்று விடலாம் என்று யோசனை கூறி ருக்மணியை திகைக்கவும் தவிக்கவும் விட்டான். கோபால் திட்டமெல்லாம், ருக்மணியால் முறியடிக்கப்பட்டது. தன் ஆசை வளர்ப்பு மகளை கொலை செய்து விடலாம் என்ற கொடூரமான யோசனையை தம்பி கோபால் சொல்லி, பல தகிடு தித்தங்கள் செய்த போதும், ருக்மணிக்கு தம்பி மேல் பாசம் குறையவில்லை. தம்பி மக்களை காப்பாற்ற எத்தனையோ முயற்சிகள் எடுத்தாள். அப்பாவின் உயில் ஒன்று இருந்ததென்றும், அதை கோபால் மனைவி கிழித்து போட்டு விட்டாள் என்றும் கோபால் மகள்கள் சொல்லி தெரிந்து கொண்ட ருக்மணி அதையும் மன்னிக்க தயாரானாள்.