"அறிந்திடுவீர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கதையை!" என்ற தலைப்பில் "விடுதலை இராசேந்திரன்" அவர்கள் கங்கை கொண்டான்' என்ற புனை பெயரில் விடுதலை' ஏட்டில் நாள்தோறும் எழுதி வந்த 40 தொடர் கட்டுரைகளை லட்சக்கணக்கான வாசகப் பெருமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்தனர்; பாராட்டினர்; பயன் அடைந்தனர். ஆர்.எஸ்.எஸ். என்பது புனுகு பூசப்பட்ட ஒரு சமுதாயப் புண். நல்ல மரத்தில் தோன்றிய புல்லுருவி . சமுதாயத்தின் புற்றுநோய். பல நேரங்களில் அதன் உண்மை உருவம் பலருக்குத் தெரியாமல், படமெடுத்தாடும் பாம்பிற்குப் பால் வார்க்கும் பணியையும் அறியாத மக்கள் பலர் செய்வது உண்டு. தமிழ்நாடு, ஆர்.எஸ்.எஸ் என்ற நச்சுப் பாம்புக்கு இடந் தராத மண்ணாகத்தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியவர்களது காலத்தில் இī
RSS அமைப்பை பற்றிய ஒரு விரிவான அலசல் இந்நூல். அமைப்பின் தொடக்கம், கொள்கை (?!), செயல்பாடுகள் என அனைத்தையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் விடுதலை இராசேந்திரன் அவர்கள். நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள், நாம் கவனிக்க தவறிய கருத்துக்கள் இந்நூலில் பல இருக்கின்றன.
எனக்கு இந்த புத்தகத்தில் குறை என தோன்றியது - கருத்துக்கள் கோர்க்கப்பட்ட விதம். இந்நூலை இன்னும் சற்றே சுருக்கமாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது. சில கருத்துக்கள் மறுபடியும் வருவதும், கருத்து தாவல்களும், வேகத்தடைகளாக இருந்தன.