காதலோடு வாழ்வேனே தலைப்பைப் பார்த்ததும் இதுவும் காதல் கதை தானா அப்படினு தான் தோணும். ஆம் இதுவும் காதல் கதை தான். குடும்பத்தின் மேல் ஒருவன் வைத்திருக்கும் காதலின் கதை.முழுக்க முழுக்க சிரிச்சுட்டே ஸ்ட்ரெஸ் இல்லாமல் படிக்கணுமா? உங்களுக்கான நாவல் தான் இந்த காதலோடு வாழ்வேனே!ஒரு குடும்பத்தையே தன் அன்பால் கட்டி வைத்திருக்கும் ஒரு தேவதையின் கதை. கணவன் மனைவிக்குள் உறவு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஏங்க வைக்கும் ஒரு காதல் கணவன் மனைவியின் கதை.அனைத்திற்கும்மேல் அம்மாவின் அடுத்த இடம் என சொல்லப்படும் அண்ணி என்ற உறவையும் தம்பிகளின் புரிதல்களையும் மனதிற்குள் நிச்சயம் கொண்டுவரும்.