சுஜாதா "ப்ரியா" மூலம் மீண்டும் நம்மை ஈர்க்கிறார். எப்பொழுது படிக்க ஆரம்பித்தேன் என்று தெரியும், ஆனால் எப்பொழுது முடித்தேன் என்று தெரியவில்லை. அவ்வளவு வேகம் சுஜாதாவின் எழுத்தில். அவ்வளவு வேகமாக நம்மை கூட்டிசென்றவர் கணேஷ். (வசந்தும் உண்டு ஆனால் லண்டனுக்கு விசா கிடைக்கவில்லை போல, அதனால் முதலிலும், இறுதியிலும் மட்டுமே நாம் பார்க்கமுடிகிறது)கணேஷ் தனியாக இருந்தும் ஒன்றும் செய்யவில்லை,இறுதிக்கட்டத்தில் தவற மற்ற நேரம் சும்மாவே இருக்கிறார் , இல்லையென்றால் யாரிடமாவது திட்டு அல்லது அடி வாங்குகிறார்(என் இப்படி செஞ்சிங்க சுஜாதா). கடைசியில் மட்டுமே கணேஷ், கணேஷ் ஆகவே தெரிகிறார். அதைபோல மற்ற கதாபாத்திரங்கள் பப்பு(பரத்குமார்),ஜனார்தன், ஷா, ரோவான், ஹெண்டர்ஸன் அனைவரும் சுஜாதாவின் Touch. முக்கியமான கதாபாத்திரமான "ப்ரியா" A typical sujatha heroine. ஆனால் ரசிக்கமுடிகிறது. சுஜாதா இலவசமாக லண்டனை சுற்றி காட்டுகிறார். அவ்வளவு அற்புதமான Detailing. பொதுவாக புத்தகம் அல்லது படம் எதை முதலில் பார்த்தாலும் ஒரு comparison தோன்றும். ஆனால் ப்ரியா புத்தகம் சரி, படம் சரி, இரண்டும் வெவ்வேறு விதம்.