தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
புத்தகம் : உடையார் எழுத்தாளர் : பாலகுமாரன் பதிப்பகம் : விசா பக்கங்கள் : 2745 நூலங்காடி : ஈரோடு புத்தக கண்காட்சி ஒவ்வொரு புத்தகமும், என் நிலைப்பேழையில் வந்ததற்கு பின்னணியில் ஒரு கதை உண்டு . 2017 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் (ஈரோடு) நடந்த புத்தக கண்காட்சியில் , உடையார் புத்தகத்தை பார்த்தேன் . நான் வாங்கிக் கொடுக்கச் சொல்லி என் தந்தையிடம் கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். அடுத்த நாள், நான் அலுவலகத்தில் இருந்து திரும்பிய போது , என் மேசையில் இந்த பொக்கிஷம் இருந்தது. அப்படித் தான் உடையார் என்னிடம் வந்து சேர்ந்தது. இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கும் போது, 6 பதிவுகளாக பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன் . புதிதாக இந்த புத்தகத்தை படிக்க விளைவோரின் ஆர்வத்தை கெடுத்துவிடும் என்பதால் ஒரே பதிவாக பதிவிடுகிறேன் . “உடையார்” - ஆயிரம் வருடங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கும் , நம் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்ட பின்னணியை கூறும் மகத்தான படைப்பு . ராஜராஜன் என்னும் அரசனின் ஆட்சிமுறை, போரில் அவன் அடைந்த வெற்றிகள் , அவனின் காதல் தன் குரு மேல் கொண்ட பற்று என அனைத்தையும் இந்த புதினத்தில் காணலாம். ஒவ்வொரு முறை , அந்த திருக்கோவிலைப் பார்க்கும் போது , கோவிலுக்கான பாறைகளை எங்கே இருந்து எடுத்திருப்பார்கள், எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் , லிங்க ஸ்தாபனம் எவ்வாறு நடைபெற்று இருக்கும் , என்னும் பல கேள்விகள் நம் மனதில் எழும் ……. அதற்கான விடைகளை இந்த புதினத்தில் காணலாம். சோழ வரலாற்றில் , எப்படி ராஜராஜனின் பங்கைப் பிரிக்க முடியாதோ, அதே போல் ராஜராஜனின் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் … பஞ்சவன்மாதேவி …. ராஜேந்திர சோழர், பஞ்சவன்மாதேவிக்கு எழுப்பிய பள்ளிப்படை கோயில் , அதை பறைசாற்றும் விதமாக அமைகிறது . “ கல்லறையை அதிசயமாக கொண்டாடும் நாம், நம் தமிழரின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோவிலை கொண்டாடுவது எப்போது ????????????????? “ சோழம் ! சோழம் !! சோழம் !!! உடையார் முற்றும் .
அவசியம் படியுங்கள் . புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..
Amazingly written. Loved the way the author takes us through the Chola time period. There were a few deviations from main storyline which at times felt draggy, but overall, you feel like you literally time travelled.