“இல்லே.... இது நடந்திருக்க முடியாது” குமுறினாள், திவ்யா. “பொய். இது எப்படி நடந்திருக்கும்?”முகத்தை மூடிக்கொண்டு கேவி அழும் அவளை அனுதாபமாகத் தொட்டான் மூர்த்தி.“மிஸ் திவ்யா! என்ன இது? வாழ்க்கைன்னா இப்படிப் பட்ட விஷயங்களை எல்லாம் சந்திச்சே ஆகணும்.”“எதுக்கு? எதுக்காக அவள் தற்கொலைக்கு முயற்சி செய்யணும்?”“மறக்கப் பாருங்க. இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாத விஷயம் இது.”“ஐயோ, முந்தைய நாள்கூட ‘திவ்யா... திவ்யா’ன்னு மூச்சுவிடாம பேசினாளே. இப்ப மூச்சு விடாம பிரேத பரிசோதனைக்காக ஜெனரல் ஆஸ்பத்திரிலே எந்த பெஞ்சில் ஐஸ்கட்டிக்கு மேலே கிடக்கிறாளோ”“திவ்யா, பிளீஸ்” மூர்த்தி கெஞ்சினான். “கொஞ்சம் அமைதியாக இருங்க.”“எப்படி? என்னால் செய்தியை நம்பவே முடிய