ராவணனின் மேல் கொண்ட பற்றினால்., இராவண காவியத்தை படிக்கும் போது மனதில் ஏற்பட்ட சில கேள்விகளே இதை எழுதுவதற்கு முக்கிய காரணம்.,இதை தயவு செய்து மதரீதியாக பார்க்காதீர்கள்.,நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு., அப்படித்தான் நாம் கண்ணால் காணாத எந்த ஒரு விஷயத்தையும் நம்புவது கஷ்டமான ஒரு விஷயம் தான்., அது போல் தான் வடமொழி காப்பியங்களை தமிழ் மொழியில் மாற்றும் போது ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் இது போல தவறுதலான பக்கங்களும் உள்ளது., நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேள்வியாக முன் வைக்கலாம்., இது இராவணன் பக்க நியாயம்.
நம்ம மனசுல ரொம்பநாளா இருக்குறத ஒரு புத்தகத்துல பாத்தா எப்படி இருக்கும்னு எனக்கு உணர்த்திய புத்தகம் இது.
ரொம்ப நாளா ராவணனை பற்றி எல்லாரும் பேசுற தகவல்கள், அவரை ஜெயிச்சவரை பற்றி எழுதிய கதையிலிருந்து வந்ததாகவே இருக்கும். யாராவது அவர் தரப்பு நியாயத்த பேச மாட்டாங்களா என்று இருக்கும். இந்த புத்தகம் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் அப்படினு அழுத்தி சொன்னதது மட்டுமில்லாம, அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றுமொரு புத்தகத்தையும் பரிந்துரைக்குது.
தோற்றவர் பக்கமும் நியாயங்கள் இருக்கும் ஆனால் அதை சொல்ல தான் ஆள் இருக்க மாட்டார்கள். இந்த புத்தகத்தின் மூலம் அதை நினையாதோரை யோசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் ஆதிபிரபா அவர்கள்.
excellent book which looks into the positive side of negative characters
excellent book which looks into the positive side of negative characters. Learned a lot about the positive side of Saguni. Learned the good nature Raavana.