துருவ் - நக்ஷத்திரா இரு வேறு துருவங்கள், ஒருவர்கொருவரை அளவில்லாது வெறுக்கும் எதிரிகள்...இருவரின் கடந்த காலத்தில் இருண்டப் பக்கங்களே அதிகம் ! ஒரு சாதராண பின்புலத்தில் இருந்து வரும் நக்ஷத்திரா, பிரபல நடிகன் துருவ்வை எதிர்த்து நிற்கிறாள்..அவனும் குறைவில்லாது அவளுக்குத் தொல்லைகளைக் கொடுக்கின்றான்.அவளுக்கு அதற்கு ஆயிரம் காரணம் உண்டென்றால், அவனுக்கும் உண்டு..அந்த ஆயிரம் காரணங்களில் 'அவர்களும்' உண்டு, அந்த 'அவர்கள்', இருண்டப் பக்கங்களைக் கிழித்து எறிந்து வரும் நேரம் தான் இந்தக் கதை!இந்தக் கதைக்கு, தோழி கவிதாவின் கவிதை என் வானில் எனை ஆள்பவள் நீயே ! என்னை ஆட்டுவிப்பவளும் நீயே !எனது துருவ நக்ஷத்திரம் நீயே !