அ.முத்துலிங்கம்: இந்தத் தொகுப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் புதுமையை விரும்புபவன். நாலு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட தொகுப்பு. ’வீடும் வெளியும்’ என்ற தலைப்பின் கீழ் 11 கவிதைகள், இரண்டு சிறுகதைகள். ’நகரமும் நானும்’ என்ற பிரிவின் கீழ் 9 கவிதைகள், ஒரு சிறுகதை. ’அவர்களும் நானும்’ என்பதின் கீழ் 9 கவிதைகளும் இரண்டு சிறுகதைகளும். கடைசியாக ’மழையும் மற்றவையும்’ என்ற தலைப்பின் கீழ் 12 கவிதைகளுடன் ஒரு சிறுகதை.இந்த தொகுப்பிலே காணப்பட்ட ஆறு சிறுகதைகளும் அவற்றின் அமைப்பிலும், புதுமையிலும் கவனத்தை ஈர்ப்பனவாகவே இருக்கின்றன. எல்லாக் கதைகளுமே வியப்பூட்டின; சிந்திக்க வைத்தன.கவிதையும் சிறுகதையும் கலந்து கட்டப்பட்டிருக்கும் இந்தக் கதம்பத்தை நான் வி