எந்தத் தட்ப வெப்பத்திலும் தளராமல் நம் வீட்டருகே ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய நீரோடையாகத் தன் வாழ்வை எளிமையாகவும் தெளிவாகவும் கொண்டுபோகிறாள் இக்கதையின் நாயகி. அவளின் உலகம் என்பது முற்றிலும் வேறானது. அப்படி இருக்கையில் தான் திடீரென்று அவளின் முன்னே வந்து நிற்கிறான் நாயகன். அவனது நியாயங்கள் வேறு! சரி பிழைகள் வேறு! இவர்கள் இருவருக்குமான தர்க்கங்கள், அதன் வாயிலாக உண்டாகும் திருப்புமுனைகள் தான் இக்கதை!
கதையின் முதல் அத்தியாயத்தில் தொடங்கும் போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது போல் பரபரப்பாக நகர்ந்தது கதை. ஒரு முறைகேடான செயலை செய்யும் பள்ளி நிர்வாகம். அதற்கான நேர்மையான போராட்டம், ஒரு போராட்டத்தை நேரில் கண்டதை போல் காட்சிகள் விரிந்தன எழுத்தாளரின் எழுத்துநடையில்.
பிரமிளா - பிரமிப்பான பெண்தான். அவளது கொள்கை, நீதி, நேர்மை எல்லாம் பார்ப்பதென்பது அரிதான ஒன்று, தனக்கு நடந்துவிட்ட அநியாயங்கள், அவமானங்களோடு, உடல் முறைகேடு என பல மன உளைச்சல்களுக்கு ஆளான போதும் நிமிர்ந்து நின்றதும், அதை அவள் எதிர்கொள்வதும் பலருக்கு தேவையான ஒரு தெளிவுரை.
கௌசிகன் - சாணக்கிய தந்திரத்தை மட்டுமே பின்பற்றி அதிக செருக்குடன் தொழில் நடத்தும் ஒரு மூர்க்கன். Corporate Criminal என்று சொல்லலாம். ஆனால் கதையில் அவன் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் கூட பிரமிளா வழியே சொல்லப்படுகின்றது, அப்படி ஒரு அழுத்தக்காரன் என நினைக்கின்றேன்.
தனபாலசிங்கம் - முதல் அத்தியாயத்திலேயே இவருக்கு நடந்த அநியாயங்களும், இவரின் உணர்ச்சி போராட்டமும் கண்களில் நீர்படலத்தை ஏற்படுத்தியது. மிகுந்த பொறுமையும், அமைதியும் கொண்ட உதாரண புருஷர்.
செல்வராணி - இவரின் உணர்வுகள் அடக்கப்படும் ஒவ்வொரு காட்சியும் மனதை யாரோ கசக்கி எறிவது போன்று ஒரு உணர்வு. சுற்றி இருப்பவர்களுக்கு நடுவில் நின்றுக் கொண்டு எல்லோரின் திசை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பதும் பின் திசை மாறுவதும் என அல்லாடுபவரின் நிலை அப்படி ஒரு பரிதாபத்தை கொடுத்தது. கதையின் இறுதி அத்தியாயம் வரை இவரிடம் அன்பும், பரிவுமாக பேச ஒரு ஆள் வராதா என ஏங்க வைத்தது.
மோகனன் - ஆண் செருக்கை பார்த்து வளர்ந்ததாலும், அதிக செல்வத்தினால் கொண்ட கர்வமும், கௌசிக், பிரமிளா உறவை பறித்து, இன்னும் சில அப்பாவிகள் தீபா, தீபன், ரஜீவன், யாழினி, சரிதாவும் பாதிக்கபடுவது வேதனையையே கொடுத்தது.
பள்ளிப் போராட்டத்தில் கௌசிகன் செய்த அநீதிக்கா? இல்லை அவன் செய்த வேறு பல பாவத்திற்க்கா? பாவம் செய்தவருக்கும், செய்யப்பட்டவருக்குமென தண்டனை கௌசிகனுடன் சேர்ந்து பிரமிளாவிற்கும் கிடைத்தது தாங்கிக்கொள்ள முடியாத வலியை கொடுத்தது. கதைதானே அக்கொடுமையை தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.
கௌசிகன் … பிரமிளாவினால் …கல்நெஞ்சக்காரன் , கோபக்காரன், நியாயமற்றவன் போன்ற நட்பெயர்களால் அழைக்கப்படுபவன்…
பிரமிளா ….நியாயத்துக்கு குரல் கொடுப்பவள் , துணிச்சலானவள் …கௌசிகனுக்கு மட்டும் அழுத்தக்காரி , திமிர்பிடித்தவள்..
இவ்வாறான முரண்பாடான குணாதிசயங்களை கொண்ட இருவர் எவ்வாறு இணைகிறார்கள் (கௌஷிகனின் மாஸ்டர் பிளான்) அதனுடன் இணைந்த அவர்களின் வாழ்க்கை பயணமே ஏனோ மனம் தள்ளாடுதே !!!..
ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தன்மைக்கேற்ற மிகைப்படுத்தல் இல்லாமல் நகர்கின்றமை சிறப்பு …அதிலும் இலங்கை தமிழில் கதை நகர்கின்றமையால் ஏற்கனவே அறிந்த கதைக்களம் என்றாலும் ரசித்து வாசிக்க தூண்டுகின்றது…
A feel good novel with a strong heroine lead. Both the lead characters are with strength and weakness just like our usual next door people. The way their characterization has come out is excellent. The story goes without a hitch, flows like a real life sequence and comes out winning end. I really like the story telling mode of the author. I wish she could write a sequel part 2 novel for "Mohanan" character. I see such a good potential in that character! Hope the author considers it! I will certainly read the next book of this author!