#15thBook #31july2024
காஃப்கா எழுதாத கடிதம் , தேசாந்திரி எப்படி அவரின் பயணங்களின் அனுபவ கட்டுரையோ. இப்புத்தகம் அவரது வாசிப்பின் அனுபவ கட்டுரை. இப்புத்தகத்தில் கிரேக்க, ரோம் எழுத்தாளர்கள், அவர்களின் எழுத்தின் பிரமாண்டம், சில சிறுகதைகளின் சிறிய விளக்கம், இயற்க்கை, ஓவியம், கலை, பசி, சாவு, உணவு ஏழ்மை எல்லாவற்றையும் மனிதன் எப்படி அணுக வேண்டும், பார்க்க வேண்டும் என்று கண் திறப்பே இப்புத்தகம்.
புனைவு கதைகளின் மீதும், மொழிபெயர்ப்பு புத்தகங்களின் மீதும் ஆர்வமுள்ளவர்களுக்கு; மொழிபெயர்ப்பு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்கும் இப்புத்தகம் மிகவும் பயன் அளிக்க கூடும். கிட்டத்தட்ட ஒரு 50+ புத்தகங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை , ஒரு குறிப்பிட்ட எழுத்து நடையை மட்டும் பின்பற்றாமல் எப்படி நம் வாசிப்பை உலக இலக்கியங்கள் அளவில் எடுத்து செல்லலாம் என்பதற்கு தக்க வழிகாட்டியாக இருக்கக் கூடிய புத்தகம் இது.