காரைப் பார்த்ததும், வாயிலிருந்த பீடிக்கு வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்த கூர்க்கா, காம்பௌண்ட் கேட்டை வேகவேகமாய் திறந்துவிட்டான்.கார் உள்ளே நுழைந்து போர்டிகோவில் அதங்கி நின்றது. ஹரிஹரேஷ் காரை விட்டு இறங்காமல் கீதாம்பரியை ஏறிட்டான்.“கீத்து...”“ம்...”“நீ படுத்து தூங்கு... நான் ஸ்டார்லைட் ஹோட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...”கீதாம்பரி சிணுங்கிக் கொண்டே - அவனுடைய தோளில் குத்தினாள்.“நீங்க அந்த ஸ்டோரி டிஸ்கஷனுக்கு போய்த்தான் ஆகணுமா...?”“என்ன கீத்து... இப்படி கேட்டுட்டே... நாளைக்கு மத்தியானம் நாம் சிங்கப்பூர் புறப்படறோம்... திரும்பி வர ஒரு மாசமாயிடும்... இன்னிக்கு கே.ஜே.ஆர். மூவீஸ் கதையை பைனலைஸ் பண்ணிட்டுப் போனாத்தான்...