வாழ்க்கைவரலாற்று நூல்கள் பெரும்பாலும் கட்டுரை வடிவில் இருக்கும். பொன்னீலன் “எங்கள் ரகுநாதன்” புத்தகத்தின் பெயரிலேயே நம்மை ஈர்த்துவிடுகிறார். நாம் நமக்குப் பிடித்தவர்கள் எந்தத் துறையானாலும் அவர்களின் சாதனைகள் சாகசங்களைப் படமாக பார்த்து புத்தகமாக படித்து உடன் பணியாற்றியவர்களின் பேட்டி எனத் தேடி தேடி அறிந்துகொள்வோம்.
பொன்னீலன், ரகுநாதனைப்பற்றி தனித்தனியே தேடவேண்டிய தேவையில்லாமல் அவருடன் பழகியவர்கள் குடும்பத்தினர் என அனைவரையும் ஒன்றிணைத்து நமக்கு அவரை தெரிய வைத்துவிடுகிறார்.
ரகுநாதனின் அறையில் நூலகத்தில் இருப்பதுபோல் நாற்காலியும் மேஜையும் மட்டுமே இருக்க, முழுக்க முழுக்க அவ்வளவும் புத்தகங்களாய் நிறைந்திருக்குமாம்.
பணியாற்றிய பத்திரிக்கைகள், பதவிகள், வாங்கிய விருதுகள், மொழிபெயர்ப்புகள் அதற்கென தனிப்பதிவு போடுமளவுக்கு தோரணமாய் நீ….ண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பில் மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவலை மொழி பெயர்த்துள்ளார்.
பொன்னீலன் (1940) தமிழில் நாவல்களும் கதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வை கொண்டவர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். முற்போக்கு இலக்கியம் மற்றும் சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டு நூல்களையும் எழுதியிருக்கிறார்.