புத்தகம் : ஐந்து நெருப்பு
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள் : 255
🔆 10 கதைகளைக் கொண்டது இந்த புத்தகம். ஒரே உணர்வாக இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளையும் பேசுகிறது இந்த புத்தகம்.
🔆 சிரோமணியின் வீட்டில் ஒரு திருட்டு சம்பவம். அவரும் அவர் மகன் ரத்தினமும் புகார் கொடுக்க வந்தார்கள். திருடிய நபர் யார் என தெரிந்து இருந்தாலும் சிரோமணி அவனைக் காட்டி கொடுக்கவில்லை. அந்த கதை தான் - பிறசண்டு.
🔆 முள்ளும் பனையும் மட்டும் விளையும் அந்த பூமியில். அந்த காட்டில் முள்ளை வெள்ளாமை செய்து கொண்டிருந்தனர். முத்து அந்த இடத்தில், அவன் அம்மா மற்றும் தங்கை உடன் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை நல்ல வேலைக்காக பம்பாய்க்கு அனுப்ப நினைத்தாள். உதவி செய்வதாக கூறிய நபர் தற்கொலை செய்து கொண்டார். அந்த கதை தான் ஐந்து நெருப்பு.
🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் இது பனிரெண்டாவது புத்தகம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்