Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
சேரமன்னன் பாண்டியன் சிறையிலிருந்து தப்பிக்கும் ஒரு சிறு நிகிழ்வை இவ்வளவு அழகாக, இத்தனை கற்பனை பாத்திரங்களை சேர்த்து சுவாரஸ்யமாக தந்திருக்கிறார். யாரையும் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த நிகழ்வு. காதலின்றி சாண்டில்யனில்லை என்பது போல், இதிலும் ஒரு சிறிய காதலை புகுத்தியிருக்கிறார்.
Moongil Kottai was my first book of Sandilyan who has been in my TBR for a while. I finished the book and i was left with a feeling of being cheated - like expecting a saga to be given a masala mass story.
Pandian Nedunjchezhiyan has captured the chera king for insulting him and put in him a unique prison from which rescue is dangerous. There is unrest in the mooventhar regime and only his safe rescue without a war can bring back Peace.
So they get Ilamaran, a young man seemingly orphan who has more daring and a roving eye to rescue him. By his side is the mysterious Imayavalli and their quest over 5 nights forms the story.
The tricks were predictable and you had random people unwarrantedly building up the hero. I found the description of 'romance' - cheap and vulgar with so much admiration about her curves. The rescue mission ultimately seemed too easy and the Pandian king a mere presence.
I am not sure after Kalki, I would like such shallow handling of history in Tamil.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
யானைக்கண்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை - சேர மன்னன்
இருபதே வயதினனான பாண்டிய மன்னன் சேரமன்னனைத் தலையாலங்கானத்தில் தோற்கடித்து யாரும் புகமுடியாத மூங்கில் கோட்டையில் சிறை வைக்கிறான்.
சேரநாட்டுப் படை வீரன் இளமாறன் - கதையின் நாயகன். இவன் தந்தை யார்? - கதையில் வரும் மர்மம்.
இமய வல்லி - பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரி - கதையின் நாயகி.
குறுங்கோழியூர்க்கிழார் - சேரமன்னன் இரும்பொறையின் நண்பர் - புலவர். மதுரையில் இருக்கிறார். பாண்டிய மன்னனுக்கு தமிழைப் பயில்விக்கும் ஆசான்.
சித்தர் - இவர் மருத்துவத்திலும், கத்திச் சண்டையும் வாள் வீச்சு, சிலம்பம், மற்போர், குதிரையேற்றம் அனைத்திலும் கரை கண்டவர். இவர் மருத்துவக் கூடமும், வீரர்களுக்கு போர் வித்தைகளைக் கற்றுத்தரும் பயிற்சிக் கூடமும் பாண்டிய நாட்டில் நடத்தி வருகிறார். பாண்டிய மன்னனே இவர் பள்ளியில் பயிலும் மாணவன். இவர் யார் என்பதும் கதையின் பின்னால் தெரிய வரும். அது ஒரு சுவாரஸ்யமான மர்மம்!
சிறையிலிருக்கும் சேர மன்னனை மீட்டு சேர நாட்டுக்கே சேர்த்து வைப்பதில் புலவருக்குப் பெரும்பங்கு உண்டு. மீட்பது இளமாறன்.
சேர மன்னன் தப்பிக்க இளமாறன் உதவுகிறான். இளமாறன் சிறைபடுகிறானா? அல்லது சுபமான முடிவா?
சாண்டில்யன் 1967ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான சரித்திரக் காவியம். ஒரு சிற்றோடை போன்றதுதான். 256 பக்கங்கள் மட்டுமே.
தமிழை நேசிப்போர் சாண்டில்யனின் தென்றல் நடையைச் சுவைக்க வேண்டுகிறேன்.
மாவீரனான ஹீரோ, அழகும் துணிச்சலும் உடைய இளவரசி, கருணை வள்ளலான மன்னன், அவசர காதல், அரதப்பழசான வர்ணனைகள், சில எதிர்பாராத திருப்பங்கள் என Typical சாண்டில்யன் நாவல்.இளமாறன் இரகசிய வழியில் நுழைந்ததிலிருந்து நூலின் இறுதிப்பகுதி வரை சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. ஏனைய பகுதிகள் சுமார் ரகம் தான். ஒருமுறை பொழுதுபோக்காக வாசிக்கலாம்.
கதையை மிக சீக்கிரம் முடித்து விட்டார் உண்மையில் இந்த கதைக்கு இந்த அளவு போதும் என்று எண்ணி இருக்கிறார் இந்த கதையை நான் இதுவரை ஆறு முறை படித்து இருக்கிறேன் எப்போது படித்தாலும் அந்த விறுவிறுப்பு நம்மை விடுவது இல்லை
தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பியதுதான். இதை கோவூர் கிழார் பாடி இருக்கிறார். இதை எல்லாம் வைத்து அடிப்படையாக வைத்து ஒரு காதல் சாகச கதையை எழுதி இருக்கிறார். மிக குறுகிய நாவல் படித்து பாருங்கள் மிகவும் உங்களுக்கு பிடிக்கும்
Very interesting historical novel; as usual, Sandilyan have narrated the story beautifully in an elaborate manner from a single line of history. His narration in all aspect of Love, patriotism, valor and language richness was wonderful and unique to him. Highly recommended for Tamil Historical novel readers.