உடனே 'நீ செய்தது தவறு' ன்னு சொல்றது ஒருவகை. அதுக்குப் பதிலா, 'எதுசரின்னு அவர் புரிந்து கொள்ள உதவி செய்றது ' இன்னொரு வகை.
இந்த இரண்டாவது வகை இருக்கு பாருங்க..... நிர்வாக இயல் - லே இது ரொம்ப முக்கியம்.
அலுவலகத்திலே வேலை பார்க்கிற ஒருத்தர் முக்கியமா தெரிஞ்சிருக்க வேண்டியது என்ன தெரியுமா?
சக ஊழியர்கள்கிட்டே எப்படிப் பழகணும்? மேலதிகாரிகள்கிட்டே எப்படிப் பழகணும்? தனக்குக் கீழே வேலை செய்கிறவர்கள்கிட்டே எப்படிப் பழகணும்? வாடிக்கையாளர்கள் கிட்டே எப்படிப் பழகணும்?
இவங்க எல்லோரிடமும் செம்மையான உறவை ஏற்படுத்திக்கிறது எப்படி? இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கிற பாடம்தான் (Inter Personal Skills) திறமையான உறவு என்பது.
Thenkachi Ko. Swaminathan was an author of various Tamil books, Deputy Director of "All India Radio" a-k-a AIR, radio channel, was a host of the daily programme Indru oru Thagaval on All India Radio (AIR).