துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் ஐந்தாவது புத்தகமாக “கசேரய்” வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான கசேரய் எனும் நாற்காலி காணாமல் போன வழக்கை கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்கிறான். ஒரு சாதாராண திருட்டு வழக்காக ஆரம்பிக்கும் விசாரணை பல இருள் பக்கங்களின் மர்மங்களை வெளிப்படுத்தி மிகவும் சிக்கலான வழக்காக மாறுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாக அதீத திட்டமிடுதலுடன் குற்றம் செய்துள்ள குற்றவாளியை கார்த்திக் ஆல்டோவால் கண்டறிய இயலுமா? மறைந்துள்ள தடயங்களை எப்படி துப்பறிகிறான் என்பதை சுவாரசியம் குன்றாமல் கூறுகிறது “கசேரய்”. Investigative thriller எனப்படும் விசாரணை மர்மக்கதை வகைமையில் அமைந்த இந்நூல், வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும்.
நூலாசிரியர் பற்றி: சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவல் எழுதுவதில் வல்லவர். இவரது இரண்டாவது நாவலான "பரங்கிமலை இரயில் நிலையம்" KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இவரது நாவல்கள் அமேசான் கிண்டில் பெஸ்ட் செல்லர் புத்தகங்களாக முத்திரை பதித்தவை.
Read this book in one go. Like his previous detective stories, this story is also a fantastic thriller. This story has everything in it. A non linear story, there is no slowness anywhere. It has humor in it. Political satire is sen balan’s trademark. As usual, he put the knots and releasing it one by one. A great read for all kinds of readers.
This triller is not just a novel. It's Gen History, medical data security and Diabetic Treatment class room.
ஆரம்பமே அட்டகாசமாகத் தொடங்குகிறது. காட்டிக் கொடுத்துக் கருங்காலி நாற்காலியைப் பரிசாய்க் கேட்ட ஒரு கருங்காலியை, உலக வரலாற்றின் உண்மை மாந்தர்களோடு உடன் உலவவிடுகிறது.
“நம்பிக்கையான ஒரு விசயத்தை அலசி ஆராய்ஞ்சு உண்மையை தெரிஞ்சுக்கிறதை விட, நம்பிக்கையைப் புண்படுத்தாம அப்படியே வச்சுக்கிறதுதான் நமக்கு பிடிக்கும்"
ஏன் யாராவது இறந்தா வீட்டுக்குள் கூட உடலை அனுமதிக்காம உடனே எரிச்சிடுறீங்க?” “தெரியல. மே பி நாடோடி வாழ்க்கைமுறையோட எச்சமா இருக்கலாம். வரலாற்றை எடுத்துப் பார்த்தோம்ன்னா நிலையா ஒரு இடத்தில் குடியிருந்த மக்கள் உடலை புதைச்சு முன்னோர் வழிபாடு செய்வாங்க. முதுமக்கள் தாழி, நடுகல் மாதிரி. ஆனா, தொடர்ச்சியா இடம் விட்டு இடம் நகர்ந்துட்டே இருக்க நாடோடி மக்களுக்கு அது லக்ஸூரி. அந்த ஆடம்பரம் அவ்வளவு ஈஸியா கிடைக்கிறது இல்ல. அதனால அப்போதைக்கு இருக்க இடத்தில் எரிச்சிட்டு, ஒரு பிடி சாம்பலை எடுத்திட்டு நகர்ந்து போயிடுறாங்க.” Sen Balan என இடைஇடையே ஊமைக்குத்துகள் பல உள்ளடங்கியது.
I'm a big fan of the Karthick Aldo deductive series. As usual, the author Dr Sen Balan rocks the story with his trademark narration. His characters' names and their characters are excellent (those who are on his social media friend list could relate easily).
This story is grip. I finished it in one go (less than an hour read). The silent troll that the author made on the so-called Tamil literature commentary/description style is putting a smile on my face often.
மிக்க அருமை திரில்லர். ஆனால் முன்கூட்டியே அடுத்தது அனுமானிக்க முடிந்தது ஒருசில கட்டத்தில். கதையில் மிக முக்கியமான விசயம் பேசப்பட்டிருக்கும் அரசியல் + அறிவியல். வாழ்த்துகள்
மிக்க அருமை திரில்லர். ஆனால் முன்கூட்டியே அடுத்தது அனுமானிக்க முடிந்தது ஒருசில கட்டத்தில். கதையில் மிக முக்கியமான விசயம் பேசப்பட்டிருக்கும் அரசியல் + அறிவியல். வாழ்த்துகள். இன்னும் கூடுதல் முயற்சிகள் செய்து கூடுதல் சுவாரசியதுடன் அடுத்தடுத்தக் கதைகள் வந்தால் சமகாலத்தின் திரில்லர் எழுத்தாளர் என்னும் கொண்டாட்டம் உங்களுக்கு நிச்சயம். மீண்டும் வாழ்த்துகள் சென் பாலன்.
Actually gripping but the story can be easily judged during the character introduction itself. Liked the tiny story about Somalia and African wood...few medical terms..Not an usual Karthick Aldo. but narration is fine throughout the end... Good try.. expecting more from sen balan...
A detective story should not reveal the real culprit until the last minute. Once again, Dr Sen Balan had done a great job of maintaining the suspense until the end. Although the list of possible culprits was limited in numbers, the author had diverted the readers' attention away from the actual culprit in a brilliant way. Good job once again Author Dr Sen Balan !
Nicely written detective thriller. Authors medical knowledge comes handy. Logic takes a backseat in the main crime scene and clinical management. The narration masks these gaping holes.
விறுவிறுப்பான சிறுகதை. பிராமணர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவி பயனடைந்தது, கேரளா பிராமணர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருவது (அது காங்கிரஸ், பிஜேபி முக்கியத்துவம் தருவது குஜராத்திகளுக்கு மட்டும் தான்) எல்லாம் தொட்டு செல்கிறது. இறக்கும் தருவாயில் சாவியை வைத்து நாற்காலி மெத்தையின் தோல் மீது எழுதுவதை எப்படி கையெழுத்துடன் ஒப்பிட முடியும்? பல கதைகளில் ஆரம்பத்திலேயே ஒருவர் மீது சந்தேகம் வந்தால் கடைசியில் அவர் சம்பந்தம்பட்டிருக்க மாட்டார். இதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால்...