இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு. அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம். தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை. இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம். டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப் பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
புத்தகத்தின் சைஸை பார்த்தால் சற்று மலைப்பாகத்தான் இருந்தது. வரிகள் மறைந்து போய், பக்கங்கள் திரும்புவது தெரியாமல் மனக்கண்ணில் நாமும் நிகழ்வுகளோடு ஓடிக்கொண்டிருப்பது ஒரு நாவல் வாசிப்பில் நிகழலாம். வரலாற்றையும் இவ்வாறு படிக்க ராகவனைத்தான் தேடவேண்டும். எழுத்தும் நடையும் அப்படி.
நானூறு ஆண்டுகளுக்கு முன் அமேரிக்கா என்னும் நாடே இல்லை. ஆனால் கடந்த நூறு வருடங்களில் அமெரிக்கா இல்லாமல் உலக வரலாறே இல்லை. உலக நாட்டாமை, உலக போலீஸ், தொழில்நுட்ப , ராணுவ, வர்த்தக ஏகாபத்தியம் என்று பல ரோல்கள். அவர்கள் வரலாற்றைத் தொடர்ந்தால் 20ஆம் நூற்றாண்டுலகின் முக்கிய நிகழ்வுகள், நாடுகள், மனிதர்கள் எல்லாவற்றயுமே படிக்க முடிகிறது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிசினஸ், பிசினஸ் பிசினஸ். மட்டுமே. . ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் , சில்லறை வர்த்தகம் என்று எல்லாமே பெரு முதலாளிகள் , அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு மேலே முதலாளிகளுக்கெல்லாம் முதலாளி. ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்ன வெளியுறவுக் கொள்கை இருக்குமோ அதே போன்றதொரு தேசக் கொள்கை.
ஒரு நாடு போரில் பங்கு பெறுகிறது என்றால் அதன் பொருளாதாரம் சுணங்கிப் படுக்கும் அல்லது லேசான ஆட்டமாவது காணும் என்பது இயல்பு. அமெரிக்க இல்லாத போரே இல்லை. தென் அமேரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆப்ரிக்கா , மேற்காசிய , கிழக்காசியா, கொரியா என மனித சஞ்சாரம் உள்ள எல்லாப்பக்கமும் சண்டைக்குப் போய் இருக்கிறார்கள்.முக்கால்வாசி இன்னொரு நாட்டுக்குள் வாலண்டியராக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியது. ஆனாலும் அதன் ராணுவ பட்ஜெட் பல பில்லியன்கள் கூடிக் கொண்டே போகுதே தவிர உள்நாட்டு சொகுசுக்கும் குறைவில்லை.
புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்தது. அதென்ன "அரசியல் வரலாறு " ? வரலாறு என்று சொன்னால் மட்டும் போதாதா? யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவுக்கு என்று வேறு எந்த வரலாறும் கிடையாது. கலை, கலாச்சாரம், மொழி , மதம் என்று எல்லாமே இரவல் வாங்கியது அல்லது இல்லவே இல்லை. செவ்விந்தியர்கள் மன்னிப்பார்களாக.
ஏறக்குறைய வாஸ்கோ த காமா இங்கு கால் ஊன்றிய போது தான் கொலம்பஸ் அங்கு கால் ஊன்றினார். தொடக்கத்தில் அவர்களும் ஒரு பிரிட்டன் காலனி தான். என்ன ஒரு வித்தியாசம், அப்போது நம்மிடம் எல்லாமே இருந்தது , அவர்களிடம் ஒன்றுமே இல்லை . விடுதலைப் போராட்டம் , உலகின் முதல் ஜன நாயக நாடு என்று அதன் பிறகு அவர்கள் அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்த பாதை தான் "டாலர் தேசம் ".
பத்தாண்டுகளுக்கு முன் வந்த புத்தகம். ஜூனியர் புஷ் சதாமை கொன்று 2005ல் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலை எதிர் நோக்கியதோடு முடிகிறது. ஆனாலும் அமெரிக்காவைத் தமிழில் புரிந்து கொள்ள ஏதுவான புத்தகம். http://manam.kishoreahamed.com/2015/1...
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆரம்பித்து ஈராக் போர் வரை ஏறத்தாழ 230 ஆண்டு கால வரலாறு தான். ஆனால் இந்த 230 ஆண்டுகளில் போர்கள், CIAயின் கைங்கரியத்தில் பிறநாடுகளில் எத்தனை பதவி கவிழ்ப்புகள் மற்றும் புரட்சிகள், செவ்விந்திய மற்றும் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மீதான அடக்குமுறைகள் ஒருபுறமும் விஞ்ஞான, கைத்தொழில் வளர்ச்சி மறுபுறமும் என அமெரிக்க வரலாறெங்கும் இரத்தமும் பணமும் ஆறாக ஓடியிருக்கின்றது. பா.ராவின் அதிக அலட்டலில்லாத இயல்பான மொழிநடையும் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிகழ்த்திய எண்ணுக்கணக்கற்ற போர்களும் நூலை சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்துவதால் 600+ பக்கங்கள் என்ற உணர்வே இன்றி வாசிக்க முடிந்தது. வாசிக்கும் போது ஒரு சில தவறுகளை அவதானித்தேன். முதலாவது ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் அதிபர் தான் எட்டாவது கிடையாது. அவருக்கு முன்னிருந்தவர்கள் என்று பா.ராவால் குறிப்பிடுபவர்கள் காஙகிரஸால் நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட "Presidents of Continental congress" . இப் பதவி கிட்டத்தட்ட பாராளுமன்ற சபாநாயகர் போன்ற பதவியேயன்றி பெருமளவு அதிகாரங்களைக் கொண்ட அதிபர் பதவிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதே போல் "Presidents of Continental congress" மொத்தம் 14 பேர் (7 பேர் அல்ல) அத்துடன் முதல் தலைவர் Payton Randolph (பா.ரா குறிப்பிடுவது போல ஹன்சன் அல்ல). இன்னொரு தவறு, நாஸி கட்சியை உருவாக்கிறது ஹிட்லர் அல்ல அன்ரன் டிரெக்ஸ்லர். அதே போன்று இருபதாம் நூற்றாண்டில் மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நேரடியாகவும், CIA மூலமும் நிகழ்த்திய திருகுதாளங்களையும் செவ்விந்தியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும் சற்று விரிவாக விவரித்து பின்லேடன் + அல்கெய்தா பற்றிய அத்தியாங்களை சற்று சுருக்கியிருப்பின் இந் நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம். முழுமையாக நோக்கின் இந்நூல் அமெரிக்க வரலாற்றை சுருக்கமாக அறிந்து கொள்ள, அமெரிக்காவின் கரெக்டரை புரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு (கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியான பதம் இல்லை); கொலம்பஸ் சென்றடைந்த கண்டம் வெறும் 500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் இன்று வல்லரசாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. எப்படி இது சாத்தியமாயிற்று என்பதை மிக விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் பா.ராகவன்.
23 மணி நேர ஒளிபுத்தகம். கேட்பதற்கு சிறிது அயர்ச்சியாக இருந்தாலும், மிக விரிவாக தகவல்களை திரட்டி எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
அமெரிக்கா என்றவுடன் வல்லரசு என்ற சொல் தானாக உங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. வட அமெரிக்கக் கண்டத்தில் பிரிட்டனின் சொந்த காலனிகளாக இருந்த13 மாகாணங்கள் எப்படி இருபத்தி ஓராம் நூற்றாண்டில் அமெரிக்கா என்னும் மிகப்பெரிய வல்லரசாக உருவானது என்ற கதையே இந்த டாலர் தேசம். இது குடியேறிகளின் தேசம்; குரூரமாணவர்களில் தேசம். கொஞ்சம் கவனமாகத்தான் சுற்றிப்பார்க்க வேண்டும்.
என்னைப் பொருத்தவரை மொத்த அமெரிக்க வரலாற்றயும் நான்கு பெரும் பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம்
1. 1500 ல் இருந்து 1783 வரை. பிரிட்டனின் காலனித் தேசங்களாக இருந்த 13 மாகாணங்கள் அமெரிக்க சுதந்திரப் போரின் மூலம் எவ்வாறு ஒற்றைத் தேசமாக உருவெடுத்தன எனும் இந்த வரலாறு. ஜார்ஜ் வாஷிங்டன் எனினும் பண்ணைக்காரர் அமெரிக்க ஜனாதிபதி ஆன கதை இது.
2. 1783 ல் இருந்து 1914 வரை. அமெரிக்க சுதந்திரப் போருக்கு பின் செவ்விந்தியர்களின் இன ஒழிப்பு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிமைகளின் கண்ணீர் வாழ்வு. பூர்வகுடிகளான செவ்விந்தியர்கலிடமிருந்து நிலத்தையும் வளத்தையும் பிடுங்கிக்கொண்ட அமெரிக்கர்கள் அப்பாவி ஆப்பிரிக்க மக்களிடம் இர���ந்து உழைப்பை உறிஞ்சிக் கொண்டார்கள். அவர்களின் துயரங்களை வார்த்தையில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆபிரஹாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் மற்றும் பல உத்தமர்கள் தங்கள் இன்னுயிரைத் தந்து பெற்றுத்தந்த கருபரின சுதந்திரத்தின் கதை இது. இதே காலகட்டத்தில்தான் அமெரிக்கா தனது தொழில்த் துறையை உலகுக்கு அகலமாகத் திறந்து வைத்தது. யார் வேண்ணாலும் வந்து கடை விரிக்கலாம்; வியாபாரம் பண்ணலாம் ஆனால் ஒழுங்காக அரசுக்கு வரி மட்டும் செலுத்தி விட்டால் போதும். உனக்கும் லாபம் எனக்கும் லாபம் இதுதான் அவர்களின் பொருளாதாரக் கோட்பாடு.
3. 1914ல் இருந்து 1945 வரை.முதலாம் உலகப் போர் தொடங்கி இரண்டாம் உலகப் போர் முடியும் வரையிலான இந்த காலத்தில்தான் அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாக நிலை நிறுத்திக் கொண்டது. அதாவது பிரிட்டனிடமிருந்த வல்லரசு பதவியியை மிகச்சரியாக இப்பொழுதுதான் பறித்துக் கொண்டது. ஐரோப்பிய தேசங்களுக்கு போருக்குத் தேவையான உணவு, உடை, ஆயுதம்,தாதுக்கள் , உலோகங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து தள்ளிக் கொண்டே இருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் குண்டூசி முதல் போர்விமானங்கள் வரை உலகப் போருக்குத் தேவையான அனைத்தையும் ஏற்றுமதி செய்யும் ஒன் ஷாப் ஸ்டாப்பாக மாறியிருந்தது அமெரிக்கா. அதுவும் உடனே பணம் தர வேண்டியதில்லை வருடாவருடம் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்தால் போதும் பின்னால் பணத்தை திருப்பி செலுத்த முடியாவிட்டாலும் அந்த தேசங்கலை தன்னுடைய வர்த்தகக் காலனிகளாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா. எப்படிப் பார்த்தாலும் லாபம்.
4.1945ல் இருந்து இன்று வரை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஈடுபட்ட இல்லை இல்லை உருவாக்கிய மற்ற போர்கள் (கிரீஸ்,கொரியா, குவாத்தமாலா ,வியட்நாம், கியூபா, எகிப்து - இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் -ரஷ்யா, ஈரான் - ஈராக் மற்றும் இறுதி ஈராக் யுத்தம்), ரஷ்யாவுடனான பனிப்போர், மேலும் அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவை இந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகள். இதில் கம்யூனிசத்திற்கு எதிரான போர்களில் (வியட்நாம் , கியூபா) பயங்கரமாக அடி வாங்கியது அமெரிக்கா. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற எண்ணெய் வளங்களை சுரண்டுவதற்கான போர்களில் எப்போதும் போல அதற்கு வெற்றிதான். (அரபு நாடுகளின் பங்காளிச் சண்டை இதற்கு முக்கிய காரணம்.)
1980 வரை மிகவும் நடுநிலையாகவும், சரியாகவுமே இந்தப் புத்தகங்கம் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்போது இஸ்ரேல்-பாலஸ்தீன்,ஹமாஸ், அல்கொய்தா ஆகிய பிராந்தியங்களுக்கு கதை நகர்கிறதோ அப்போது ஆசிரியரின் வலதுசாரி பூனைக்குட்டி வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது. எனவே இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரங்களைப் படிப்பதற்கு இந்த புத்தகத்தை தயவுசெய்து refer செய்யவேண்டாம். மாற்றாக கிழக்கு பதிப்பகத்தின் முகில் அவர்கள் எழுதிய "யூதர்கள் - வாழ்க்கையும் வரலாறும்" புத்தகத்தைப் படிக்க வேண்டுகிறேன். இதை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், இவ்வளவு நீண்ட 400 ஆண்டு கால வரலாற்றை மிகச் சிறப்பாக பா.ராகவன் அவர்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். உண்மையில் அமெரிக்காவில் அரசியல் சரித்திரத்திக்கும் யுத்த சரித்திரத்திற்கும் அதிக இடைவெளி இல்லை. அத்தேசத்தின் அரசியல், யுத்தங்களை தீர்மானிக்கின்றது. யுத்தங்களில் கிடைக்கிற வெற்றியும் தோல்வியும் அடுத்தடுத்த அரசுகளை தீர்மானிக்கின்றன. இந்த அரசியல் - யுத்தச் சக்கரம் அமெரிக்க மக்களை மட்டும் ஒரு போதும் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது தான் வல்லரசின் ஒரே சூத்திரம். இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு ரஷ்யா போல அமெரிக்காவும் சிதறிவிடும் அபாயம் இருப்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இன்னும் வெள்ளை மாளிகை, ஜான் எஃப் கென்னடி மரணம், மோனிகா லெவின்ஸ்கி, என பல அத்தியாயங்களை மேலோட்டமாகக் கூட சொல்லவில்லை அவ்வளவு பெரிய புத்தகம். நிச்சயம் படித்துப் பாருங்கள் உலக வரலாற்றில் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கப்பெறும்.
அன்புடன் நௌஷாத்.
புத்தகத்தின் பெயர்: டாலர் தேசம் பப்ளிகேஷன்ஸ்: எழுத்து பிரசுரம் ஆசிரியர்: பா. ராகவன் பக்கங்கள்: 836
The best part of this book is that it gives insight about mindset of leaders as how they handle themself in crucial situations How it's possible for USA to be in limelight all the time Passionate writer Pa Ra A lot of groundwork and time spent on this book
ஒரு வல்லரசின் சுருக்கமான வரலாறு மிக பிரம்மாண்டமாக 1000 பக்கங்களில் விரிகிறது.
அமெரிக்காவை கண்டு ஏன் உலக நாடுகள் அஞ்சுகின்றன. அமெரிக்கா எப்படி ஒரு அசைக்க முடியாத வல்லரசாக உருவானது, எப்படி தன்னை உருவாக்கி கொண்டது, நாடு உருவான ஆரம்ப காலக்கட்டங்களில் எந்த மாதிரியான இன்னல்களை அது சந்தித்தது என்பதெல்லாம் ஓரளவிற்கு கூற முயற்சித்திருக்கிறார். ராணுவரீதியாக அமெரிக்கா தன்னை வலுப்படுத்தி கொண்டது என்பதை மிகவும் பிரதானமாக்கி கூறப்பட்டுள்ளது.ஆனால் உலகின் அடிநாதமாக விளங்கக்கூடிய அமெரிக்காவின் பொருளாதாரத்தை பற்றியோ, அமெரிக்காவின் தன்னிறைவு கண்ட உள்கட்டமைப்பு (இன்று வரை IT இளைஞர்களின் கனவு தேசமாக அமெரிக்கா இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்பது என்னுடைய கருத்து)பற்றியோ அவ்வளவாக விளக்கப்படவில்லை.
புத்தகத்தில் ஆங்காங்கே ஆச்சரியப்படுத்தும் வகையில் பல விஷயங்கள் இருக்கின்றன.புத்தகத்தின் கடைசி கால் பகுதி ஒசாமா பின் லேடன் பற்றிய வருணனைகளில் போய் விடுவது கொஞ்சம் ஆயாசத்தை வரவழைக்கிறது.புத்தகத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் சற்றே குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.மேலும் புத்தகம் 2004 உடன் முடிவு அடைகிறது, இதுவும் ஒரு சின்ன குறை.ஆனால் ஒரு அகண்ட தேசத்தின் வரலாறை 1000 பக்கங்களில் கொடுக்கும் பொழுது இதை போன்ற சின்ன சின்ன குறைகளை புறந்தள்ளி விட்டுவிடலாம்.
இந்த புத்தகத்தை ப் படிக்க ஆரம்பித்தபோது இதைப் படித்து முடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ரிவிஷன் தேர்வுகளை எழுதிவிட்டுமதியம் 'சில நேரம் படிக்கலாம்' என்று அமர்வேன். பல மணிநேரம் போவதுகூட தெரியாமல் படிப்பேன். அத்தனை ஆர்வமூட்டும் நூல்!
'அமெரிக்காவின் வரலாற்றைப் படித்தால் போதும்... கடந்த நூற்றாண்டின் பெரும்பாலான உலகவரலாற்றைப் படித்தது போன்றது' என்று முன்னொரு முறை கேள்விப்பட்டிருக்கிறேன். .... அது உண்மை என்று இப்புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டேன்.
உலக அரசியல் வரலாற்றைப் பற்றியொரு அடித்தளத்தைக் கொண்டது இந்நூல்!
டாலர் தேசம் - அண்டம் பணியும் ஏகாதிபத்திய ���மெரிக்காவின் பிறப்பும் எழுச்சியும் அதன் குள்ள நரித்தனமும் ,சித்தாந்தம் என்றால் இனிப்பா புளிப்பா என்ற அதன் சித்தாந்தமும் வல்லரசு என்ற ஒற்றைச்சொல் மேல் அதற்க்கிருந்த தீராக்காதலும் , அக்காதலால் அடிக்கவேண்டியவனை அடித்தும் அணைக்கவேண்டியவனை அணைத்தும் அழிக்க வேண்டியவனை தடம் தெறியாமல் அழிக்கும் அதன் குணாதிசயங்களை புரிந்து கொள்ள தமிழின் மிகச் சிறந்த புத்தகம் . வரலாற்று நூல் புகழ் பா.ராகவனின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் B-)
இது அட்டகாசமான விறுவிறுப்பான புத்தகம்.கண் முன் ஒரு வரலாறு ஓடியாது..அருமை..அருமை..ஏன் வாஷிங்கடன் பெயர் வந்தது.முதலாம் உலகப் போர்களில் அமெரிக்கா அடைந்த ஆதாயாம்,ஏன் அமெரிக்கா ஜெர்ம்னி மீது அணுகுண்டு வீசாமல் ஜப்பானிடம் வீசியது..இது போன்ற விடைகள்,மார்டின் லூதர் கிங்,வாஷிங்டன் ,ரூஸ்வெல்ட் ஆளுமை,இரட்டை கோபுரம் தாக்குதல் பின்னனி..இது போல் பல..உங்கள் கடின உழைப்புக்கு நன்றி..
Excellent one.....On reading this book you will about USA and how and there conflicts with other nation.This book will take you through many wars and how the America is responsible for it or there involvement.
"Statue of Liberty" is the Coversheet of the book.But book has not given any notes about it...
Excellent book by Raghavan on the history of US which dates back around 600 years ago. Very good analysis with both pros and cons on every decision made by US and its impact on other countries. Classic ride of reading which kindles you to emote with the scenarios. Enjoy the ride with history.
தன் 2 முதல் 7-வது அதிபர் வரை உள்ள தகவல்களை மறைத்திருக்கிறது அமெரிக்கா, நம் ஊர் நிலக்கரி ஊழல் போல அமெரிக்காவில் வாட்டர் கேட் ஊழல் நடந்திருக்கிறது, நம்புங்க சார் அமெரிக்க ஜனாதிபதி ஒருத்தர் பதவி காலம் முடியிறத்துக்கு முன்னாடியே ராஜினாமா பண்ணி இருக்காரு, தம்பி ஒரு உலகப் போர் மாதிரி ஒரு சூப்பர் பிசினஸ் இனிமே லைஃப் டைம்ல கிடைக்காது என்று அமெரிக்கா ஏன் சொல்கிறது...? அமெரிக்கர்கள் ஏன் கண்டுபிடிப்புகளில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள், அப்படி கண்டுபிடிப்புகளை எப்படிக் காசு ஆக்குகிறார்கள்? ஒரு அமெரிக்க அதிபரோட வீக்னஸ் அவரோட மனைவி கிட்ட மணிக் கணக்குல கடலை போடுவது தான். அமெரிக்காவில் குடும்ப அரசியலா...? இப்படி பல சுவாரஸ்ய விஷயங்களையும், நீண்ட நெடிய வரலாற்றையும் ஆதி அந்தம் என்கிற எல்லைக் கோட்டில் வடிக்கும் சிரமமான பணியை அண்ணன் பா ராகவன் ‘அம்புட்டு தான்யா’ என்று அசால்ட் காட்டி இருக்கிறார். என்னைப் பொறுத்த வரை, டாலர் தேசத்தைப் படிப்பவர்களுக்கு உலக சரித்திரத்தின் ஒரு அவுட் லைனே கிடைத்துவிடும். எனக்கு கிடைத்த அவுட் லைன் உங்களுக்கு அழுத்தமாக கிடைக்கட்டும்.
It is like a local author version of American History. :D Obviously I will prefer local author books for quick understanding :p
It gives a gist of almost every incident (but only from American history's perspective) from the very start (when Christopher Columbus discovered American continent) till George W. Bush's first tenure (2004). Any total stranger to the topic can also get a basic insight about how US considers both Trade and War as it's two eyes.
The writing style sometimes feel so outdated (coz the chapters came as weekly episodes 15+ years back). But history remains unchanged, and author is very successful conveying the point he is trying to make. Most of the times it felt like am reading a movie script with interesting twists and turns.
Totally worth a read, but some patience is required.
Excellent book to understand the evolution of USA and the politics around. It not only captures the socio political situations of America but also unfolds the concurrent politics prevailing in other countries simultaneously. My sincere thanks to the author for adopting simple style to explain serious issues.
We can understand not only USA history also how changed complete world politics because of USA... The book also help us to understand the Right and Left politics.. Whatever politics USA make their people happy.. But wtever may be the positive from their side surely they threatening out human being that be human
Wow what a book.. This would surely be in my top 10 books.. It was told in a manner that you wish history in schools should have been taught like this.. It's the history of America, starting from explorer Columbus finding this place to the start of 21st century.. Lots of secrets and theories unfold through this book, I got really overwhelmed to relish it in my mother tongue..
வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என நீருபிக்கின்றது இப்புத்தகம் . மேலும் நூலாசிரியர் நடுநிலைமையை கையாண்டுள்ளார். உலக அரசியலை புரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தக வரிசையில் நிச்சயம் சேரும்.
simple writing.Easy to understand.Gives clear picture of events in the history of America.wonderful and amazing .Ragavan sir nailed it. Great book to read.....இது ஒரு பொக்கிஷம்