தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளச்சிப் பாதையில் பயணிக்க என்ன காரணம்? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போனது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகாணும் முயற்சியாக, உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன சில தேசங்களின் வரலாற்ரையும், உலகின் ஆச்சர்யமான சில தேசங்களின் வரலாற்ரையும் பல நூல்களின் வாயிலாக அறிந்து, ஆரய்ந்து தெரிந்து கொண்தன் மூலமாக உருவானதே காணாமல் போன தேசங்கள் என்கிற இப்புத்தகம்.
யூகோஸ்லேவியா, செக்கஸ்லோவோக்கியா, சோமாலியா, போஸ்ட்வானா, எஸ்தோனியா போன்ற பெரும்பாலும் அதிகம் அறிந்திடாத நாடுகளின் அரசியல், சமூக வரலாறு இந்நூலில் மிகச்சுருக்கமாக மிக எளிமையான எழுத்து நடையில் எழுதப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் ஆர்வமுள்ளோருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.