நாதஸ்வர ஓசையுடன் அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது.. சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தின் முன்புறத்தில் 'ஆகாஷ் வெட்ஸ் அனுராதா' என்ற தட்டி வைக்கப் பட்டிருந்தது.. ஷாமியானா கட்டப்பட்டிருந்த வாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன.. இருபுறமும் குலை தள்ளிய அதன் தோற்றம் கரம் குவித்து வரவேற்பது போல் அழகாக இருந்தது.. வாசலின் இரு பக்கமும் குத்து விளக்கு ஓவியத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த சீரியல் விளக்குகள் ஒளிர்ந்தது..