'வாராயென் தோழி வாராயோ... மணப்பந்தல் காண வாராயோ...'என்று ஒலி பெருக்கியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நத்தத்திற்கு அருகிலிருக்கும் கிராமம் அது.. கணவாய்பட்டி.. இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்திருப்பதால் கணவாய்பட்டி என்ற பெயரைப் பெற்றதாம். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் போகும் ரோட்டில் அமைந்திருக்கும் அந்தக் கிராமத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு..அதுதான் 'கணவாய் கருப்பு' கோவில்.. ஊருக்கு சமீபத்தில் அடர்ந்த மரங்களின் இடையே குளுமையான காற்று வீச.. குதிரையில் ஏறி கையில் வீச்சரிவாளுடன் காட்சி தரும் கணவாய் கருப்பசாமி.. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமென்று அந்த வட்டார மக்கள் வழிபடும் தெய்வம். தினமும் நான்கைந்து கார்களும் ஏழெட்டு மாட்டு வண்டிகளும் கோவ&#