Jump to ratings and reviews
Rate this book

கன்னி மாடம்

Rate this book
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை, தப்பியோடும் அந்த இருவரையும் காரிருளில் கடுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் திடீரென கொள்ளிவாய்ப் பிசாசைப்போல் வாயைத் திறந்து அக்கினி ஜ்வாலையையும் கக்கத் தொடங்கியது. அபராஜிதனோடு திரும்பி நோக்கிய காரி, தீ ஜ்வாலையைக் கண்டு ஏதும் புரியாதவனாய், “அதென்ன பிரபு?” என்று வினவினான்.
“எதிரிகள் எறிந்த தீப்பந்தங்களில் சில பாதைத் திருப்பத்திலிருந்த மூங்கிற் புதர்களில் விழுந்திருக்கும்.புதர் பற்றி எரிந்து காட்டுத் தீ பரவியிருக்கும்!” என்றான் அபராஜிதன்.
“பாதை குறுகலாயிற்றே! மூங்கிற் புதர் தீப்பிடித்தால் வெடிக்குமே. அக்கம் பக்கத்தில் ஓடவும் இடமிருக்காதே” என்று காரிவளவன் கேட்டான்.
“மூங்கிற் புதரும் பாதையை ஒட்டித்தான் வளர்ந்திருக்கிறது. வெடித்தால் ஜ்வாலையுடன் மூங்கில்கள் பாதையில் தான் விழும். சாதாரணமாகவே காட்டுத் தீ வேகமாகப் பரவும். அதுவும் தென்றடிலக்கும்போது கேட்க வேண்டியதேயில்லை. எதிரிகள் தப்புவது குதிரைக் கொம்பு தான்...” என்று சொல்லிக் கொண்டுபோன அபராஜிதன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “காரி...” என்றான்
“என்ன பிரபு?”
“நமது நண்பர்களும் எதிரிகளுடன் சிக்கிக் கொண்டிருப்பார்களே!” தீயைத் தாண்டி வரமுடியாது. எதிரி வீரர்களோ ஏராளமாயிருக்கிறார்கள். நம்மைத் துரத்தமுடியாததால் திரும்பி அவர்களை வளைத்துக் கொண்டால்?”
காரி உடனே பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேரங்கழித்துப் பதில் சொன்னபோது அவன் குரலில் வருத்தமும் கலந்திருந்தது. “ஆமாம் பிரபு! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?...” என்றான்.
“திரும்பிப் போய்ப் பார்த்தால் என்ன?”
“பார்த்துப் பிரயோசனம்? காட்டுத் தீயைத் தாண்டி நாம் உட் செல்ல முடியுமா? அப்படியே சென்றாலும் பாக்கியிருக்கும் வீரர்களைச் சமாளித்து நண்பர்களைக் காப்பாற்ற முடியுமா?”
“தீயைத் தாண்டிச் செல்ல வேண்டாம். பக்கத்துச் சரிவுகளில் தொத்தி, சுற்றுவட்டமாகச் செல்ல வழியிருக்கிறதா என்று பார்க்கலாமே. வீரர்கள் அதிகமிருந்தால்தானென்ன? மடிவதானால் நாம் எல்லோரும் ஒன்றாக மடியலாமல்லவா?”
“முடியாது பிரபு! உங்களை மீண்டும் ஆபத்தில் சிக்க வைத்தால் நான் நாட்டுக்குத் துரோகம் செய்தவனாவேன் என் நண்பர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள். பாண்டி நாட்டின் விதியை நிர்ணயிக்க வேண்டிய உங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்பது தேவரின் விருப்பம். அதை நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் மீற முடியாது!” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் காரிவளவன்.
மேலே ஏதும் பேச வழியில்லாமல் அபராஜிதன் ஆகாயத்தை நோக்கிக் கண்களை உயர்த்தினான். 'இப்பேர்பட்ட பக்தர்களிருக்கும்போது எதற்கு மீண்டும் மரணத்தை நாடுகிறாய்? தப்பிவிடு' என்று பரிகசிப்பது போல் விண்ணின் தாரகைகள் கண்ணடித்தன. அவற்றைப் பார்க்கக்கூட வெட்கமாயிருந்தது அபராஜிதனுக்கு. பெரியவீரர்களான மூன்று பேரை எதிரிகளிடம் சிக்கவிட்டு ஓடுவது வீரனான அவனுக்குப் பெரும் வெறுப்பாயிருந்தது. நிவர்த்திக்க முடியாத அந்தக் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட காரி, “கவலைப்படாதீர்கள், பிரபு! தேவரைக் குடிசையில் யாரும் தேடமாட்டார்கள். மற்ற இருவரும் போர்த் தந்திரத்தை நன்றாக அறிந்தவர்கள். அவர்களைக் கொல்வதும் அவ்வளவு எளிதல்ல” என்று ஆசுவாசப்படுத்தினான். தன் உள்ளத்திற்கு ஆறுதலளிப்பதற்காகச் சொல்லப்பட்ட அந்த உபசார வார்த்தைகள் அபராஜிதனுக்கு எவ்வித மனச் சாந்தியையும் அளிக்காவிட்டாலும் காரியின் பிடிவாதத்தாலும் வேறு எதையும் அச்சமயம் செய்ய முடியாதென்ற நிர்க்கதியான நிலைமையாலும் எதிர்ப்பக்கமிருந்த சமவெளியை நோக்கிக் கண்களைத் திருப்பி வெறித்துப் பார்த்துக்கொண்டே பயணம் செய்தான். இப்படிச சற்று தூரம் சென்றதும் சிறு வாய்க்கால் ஒன்று குறுக்கிட்டது. வாய்க்காலைக் கண்டதும் குதூகலத்துடன் காரி கூச்சலிட்டு, “பிரபு! வாய்க்கால் வந்து விட்டது” என்றான்.
“எந்த வாய்க்கால்?'!
“பாண்டிய நாட்டிலிருந்து மழவராயன் பிராந்தியத்தைப் பிரிக்கும் காட்டு வாய்க்கால். இதைத் தாண்டி விட்டால் அபாயமில்லை.”
இப்படிச் சொல்லி விட்டுக் காரி புரவியைத் தூண்டி விடவே துரிதமான தூரப் பிரயாணத்தால் அலுத்திருந்த அந்தக் குதிரையும் வாய்க்காலில் சரேலென இறங்கித் தண்ணீரை வாரியடித்துக் கொண்டு எதிர்க்கரை ஏறியது. கரையில் குதிரையை நிறுத்தி இருவரும் கீழே இறங்கியதும், ஈட்டி பிடுங்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்ட காரி, அபராஜிதனை நோக்கி, “பிரபு! மேலங்கியைச் சற்றுக் கழற்றுங்கள். காயத்தை அலம்பி ரத்தத்தை நிறுத்தத் துணி வைத்துக் கட்டுகிறேன்” என்றான்.

658 pages, Kindle Edition

First published June 1, 2004

80 people are currently reading
1286 people want to read

About the author

Sandilyan

76 books389 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
228 (39%)
4 stars
202 (34%)
3 stars
111 (19%)
2 stars
24 (4%)
1 star
14 (2%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Sampath Nellaiappan.
46 reviews2 followers
August 15, 2016
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் சரித்திர நாவல்..
ஆரம்பிக்கும் இருந்த எதிர்பார்ப்பை சிறிதும் ஏமாற்றாமல், கையிலெடுத்தபோதெல்லாம் இறங்காமல் தொடர ஆணையிட்ட புத்தகம் :)

சிங்களரிடம் அடிமைப்பட்டிருந்தபோது தமிழகத்தின் நிலை ஏப்படி இருந்தது என்பதை தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த புதினம்.

பெண்ணாசை-அதன் விளைவுகள், ராஜதந்திரம், போர்தந்திரம், நாட்டுபற்று, பேச்சுத்திறன், காதல், தனிமனித முடிவுகளின் விளைவுகள் போன்றவற்றை பண்டைய தமிழரின் வாழ்வியலுடன் இணைத்து கூறியுள்ளது இந்த கதை.

சாண்டில்யணின் மற்றுமொரு மறக்கமுடியாத புதினம் :) :)
Profile Image for Sridhar Babu.
207 reviews6 followers
February 18, 2017
ஆசிரியர்.
சாண்டில்யன்

கதாபாத்திரங்கள்
அபராஜிதன், கார்குழலி,.மாதவி,இலங்காபுரன், வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், சிவானந்த அடிகளார், மழவராயன், காரி, கருணாகர தேவன், ஜகத்விசயன், பல்லவராயன்.

கதை நடைபெறும் வரலாற்று பகுதிகள்:
மதுரை, கன்னி மாடம், மேலைமங்கலம் மற்றும் கூடல்

நாவலின் தன்மை :
வரலாற்று புதினம்.

கதை:
பாண்டியர்களின் தாயாதிச்சண்டை நடைபெற்ற காலமான 12 ம் நூற்றாண்டில் நிகழும் கதை இது.

மதுரையை பராக்கிர பாண்டியனும், நெல்லையை குலசேகர பாண்டியனும் இரண்டு பட்டுக்கிடக்கின்ற பாண்டிய நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.

தயாதிச்சண்டை மற்றும் மனஸ்தாபம் காரணமாக குலசேகர பாண்டியன், மதுரை மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் படை உதவி வேண்டி இலங்கை அரசன் பராக்கிர பாகுவிடம் கேட்க அவன் தண்ட நாயகனான இலங்காபுரனை அனுப்புகிறான். இலங்காபுரன் மதுரை வருவதற்குள் குலசேகர பாண்டியன் மதுரையை கைப்பபற்றி பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவியையும் கொன்று விடுகிறான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன் குலசேகரனிடமிருந்து தப்பி மலைநாட்டில் தஞ்சமடைகிறான்.பெரும் படையுடன் மதுரை வரும் இலங்காபுரன் குலசேகரனை விரட்டி பராக்கிரமனின் மகன் வீரபாண்டியனை பாண்டிய மன்னனாக்குகிறான். வீரபாண்டியனை ஒரு கைப்பொம்மை போலாக்கி பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்க இலாங்காபுரன் திட்டமிடுகிறான். வீரபாண்டியனை மதுவுக்கும், தன்மருமகளும் பேரழகியுமான மாதவியுடன் பழகவிட்டு பாண்டிய நாட்டை மறைமுகமாக சிங்கள ஆட்சிக்கு உட்படுத்துகிறான்.

பாண்டிநாடு இலங்காபுரனின் மறைமுக சிங்கள ஆட்சியில் படாதபாடு படுகிறது. தமிழர்கள் அடிமைகளாக இலங்கையிலுள்ள புத்த விகாரைகளுக்கு அனுப்பப்பபடுகிறார்கள். வயல்கள் எரித்து அழிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தங்கத்தைக் கொண்டு இலங்கை காசுகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.

பாண்டிய சேனாதிபதியும், வீரனுமாகிய அபராஜிதன் இதையெல்லாம் கண்டு உள்ளம் கொதிக்கிறான். சிங்களகளின் கைப்பொம்மையாய் மது,மாது ஆகிய இரண்டிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் வீரபாண்டியனுக்கு எதிராக சதி செய்து தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். பாண்டிய நாடு இலங்கையிடம் அடிமைப்பட்டிருக்கும் நிலைகண்டு சோழர்களும் கொதித்து எழுகிறார்கள். தங்களிடம் ஆதரவு கேட்டு நிற்கும், விரட்டப்பட்ட இன்னொருபாண்டிய மன்னனாகிய குலசேகரனுக்கு உதவி செய்து பாண்டியநாட்டை சோழ நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அந்நாட்டின் படைத்தலைவர்கள் எண்ணுகிறார்கள்.

இந்நிலையில் பாண்டிய நாட்டு எல்லையில் இருக்கும், மழவராயன் என்னும் சிற்றரசனின் ஆட்சிக்குட்பட்ட மேலைமங்கல சிற்றரசும், அதற்குட்பட்ட கன்னிமாட கோட்டையும், மழவராயன் மகளும் பேர ழகியுமான கார்குழலியும், இந்த அரசியல் சூழ்நிலையில் சிக்குகிரார்கள்.

வீரபாண்டியன் கார்குழலியை மணந்து மழவராயனின் உதவி பெற்று, இருவரும் இணைந்து படையெடுத்து இலங்காபுரனை கொல்வது. அல்லது குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியனுக்கு கார்குழலியை மணமுடித்து சோழர்களின் உதவியுடன் இலங்காபுரனை விரட்டுவது, போன்ற யோசனைகள் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை கருதி மழவராயன் முன் வைக்கப்படுகின்றன. இதில் மழவராயன் வீரபாண்டியனுக்கு மகள் கார்குழலியை மணம் செய்ய எண்ணுகிறான்.

ஆனால் கார்குழலியின் மனமோ பாண்டிய சேனாதிபதியான அபராஜிதனையே நாடுகிறது. அவனை உயிருக்குயிராக விரும்புகிறாள் கார்குழலி. அவளை சிறிய வயதிலிருந்து வளர்த்த சிவானந்த அடிளாரும் உணர்ந்து கொள்கிறார். அபராஜிதனும் கார்குழலியின் காதலை நன்கு உணர்ந்து, அவளை பலவந்தமாக மணமுடிக்க கன்னிமாடத்திற்கு பெரும் படையுடன் வரும் பாண்டிய மன்னன் வீரபாண்டினிடமிருந்தும், தந்திரமாக அடைய முயலும் விக்கிரம பாண்டியனிடமிருந்தும் கார்குழலியை காப்பாற்றுகி ன்றான்.

பின் அபராஜிதன் பாண்டிய நாட்டுக்குள்ளே புரட்சிப்படை தோற்றுவித்து சோழர்கள் உதவியுடன் இலங்காபுரனையும், பெரும்படையுடன் கூடல் நகருக்கு வரும் இன்னொரு இலங்கை சேனாதிபதி ஜகத்விஜயனையும் கொன்று அவர்கள் தலைகளை கழுகுக்கு இரையாக்குகிறான். பின்னர் கார்குழலியை மணந்து கொண்டு கன்னிமாடத்தில் புரட்சிப்படையுடன் பாண்டியநாடு மீண்டும் இலங்கையிடம் அடிமையாகதபடி கன்னிமாடத்தை ஒரு சிறந்த காவற்கோட்டையாக்குகி றான்.

என் கருத்து..
அருமையான புதினம். தனக்கே உரித்தான பாணியிலும், கதை சொல்லும் விதத்திலும் வாசகர்களை 12 ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார் சாண்டில்யன் என்றால் மிகையாகாது.

புதினத்தின் விறுவிறுப்பான பகுதி என்றால் கன்னி மாடக் கோட்டையில் இடம் பெரும் சம்பவங்களை சொல்லலாம். அபராஜிதன்-கார்குழலி சந்திப்பு, கோட்டையிலுள்ள ரகசிய வழிகளை அபராஜிதன் கண்டுபிடிப்பது, கன்னிமாடத்தை முற்றுகை இட்ட வீரபாண்டியனையும் அவனது வீரர்களையும் தந்திரம் வீரம் இணைந்து அபராஜிதன் விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள், ஏற்கனவே விறு விறுப்பான நாவலுக்கு மேலும் விறு விறுப்பு ஊட்டுகிறது.

வீரபாண்டியன்,மழவராயன்,சோழ பல்லவராயர்கள், போன்ற உண்மைக்கதாபாத்திரங்களுடன், அபராஜிதன், கார்குழலி, மாதவி போன்ற கற்பனை பாத்திரங்களை சரியானபடி உலவவிட்டு விருந்து படைக்கிறார் சாண்டில்யன்.

கன்னி மாடம்---அமோகம்
Profile Image for Seshadri.
12 reviews
August 21, 2019
கன்னிமாடம், முதற்கூற்றிலிருந்து இறுதி வரையில் என்னை முழுவதுமாகப் பிணைத்திருந்தது.
ஈர்த்த கதாபாத்திரங்களான,
அபராஜிதன்- பாண்டிய சேனாதிபதி
கார்குழலி - மழவரையர் மகள்
அடிகளார் - குழலியின் குரு
மாதவி - இலங்கை சேனாதிபதியின் மருமகள்
இவர்களின் ஒவ்வொரு முடிவில்தான் கதை நகர்ந்தது.
வரலாற்றை ஒற்றிய புதினமாக இருந்தாலும் மிக வேகமாக விருவிருப்பை ஊட்டிக்கொண்டே சென்றது.
வர்ணனைகளுக்காகவே படிக்கலாம் எத்தனைமுறையேனும்.
சாண்டில்யனின் எழுத்துஜாலம் ஓரிரு அத்தியாயங்களில் நெஞ்சை பிடித்துக்கொண்டு படிக்கும் அளவில் பல பல உணர்வுகளைக் கலந்தாற்போல் இருந்திற்று.

"அல்லிப் பூம்பொழிலும் அன்னப் பேடையும்"
---
Review and rating given are not based on any evaluative measures, yet only my brief take on what I had absorbed from the book.
Profile Image for Navaneeth Krish.
7 reviews7 followers
July 13, 2014
சாண்டில்யன் வர்ணனைகள் உச்சஸ்தாதி! காதல் காட்சிகள் நிரம்பிய 37,38 ஆம் அத்தியாயங்களை ஒரு நாள் காலையில் படிக்க நேர்ந்தது. அன்று முழுக்க வேலை ஓடவில்லை! அது ஒருபுறமிருக்கட்டும்!

தமிழ் முன்னோர்களின் போர்த்திறம், போர் தந்திரம், இவை இரண்டையும் கண்டு வியந்தேன். ஒரு அத்தியாயத்தில் 'மார்க்கீயன் ஒரு சிறு குதிரைப்படையை சீராக, குதிரையின் குளம்படிகள் ஒருமித்த சப்தம் எழுப்பியவாறு நடத்திச்சென்றான்' என்பதைப் படிக்கையில் இப்பொழுதைய 'மிலிட்டரி' முறைகளிலுள்ள 'மார்ச் பாஸ்ட்(March Past)' என்பதில் தமிழர்கள் எத்தகைய முன்னோடி என்பதை அறிந்து பிரமித்துப்போனேன்!

மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய இப்புத்தகம், என்னை மேலும் மேலும் சரித்திர நாவல்கள் படிக்கத் தூண்டுகிறது!
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
உட்கட்சிப் பூசலைப் போல் பராக்கிரம, குலசேகர பாண்டியர்களுக்குள் சச்சரவு வந்த சமயத்தில் எதிரக்கட்சிக்காரன் ஆட்சியைப் பிடிப்பது போல் நண்பனாக இலங்காபுரன் வந்து மக்களை கொடுமை செய்ததையும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய வீரபாண்டியன் காமச் சிலையான மாதவியை ரசித்துக் கிடந்த காலத்தில் சோழன் இலங்காபுரனை விரட்டிய நிகழ்வில், கருவிழியாக இருந்து அந்த நிகழ்வுக்கு வெற்றி தேடித் தந்த அபராஜிதனைப் பற்றியும், அவனின் மையல்கள் சுற்றிய கார்க்குழலியை காமுக வீரபாண்டியனிடமிருந்தும், வஞ்சக விக்ரம பாண்டியனிடமிருந்தும் காத்ததையும் அற்புதமுமாக எழுத்தாக்கியிருக்கிறார் சாண்டில்யன்.
19 reviews
April 16, 2023
Kanni Maadam is a historical novel set during 1167-1168 A.D. and focuses on the power struggle between Veera Pandiyan and Kulasekhara Pandiyan. Veera Pandiyan is ruling Madurai with the help of a Lankan commander who won it for him from Kulasekhara Pandiyan. Kulasekhara reaches out to Cholas under Rajadhiraja 2 for help, who are themselves keen to drive out the Lankans. Meanwhile, several Pandiyan commanders in Madurai plot against Veera Pandiyan as they dislike his spineless rule and the dominance of the Lankan commander and his niece. The opposite factions are both trying to get help from the Melaimangalam chief whose land is in the middle of Pandya territory. Veera Pandiyan and Vikrama Pandiyan (son of Kulasekhara) both try to marry the princess of the Melaimangalam chief to get his support. Aparajita, the Pandya commander who is admired by the people for his bravery and war skills plays spoilsport and foils their plans. Does he drive out the Lankans and save the princess forms the crux of the story. Unlike other Sandilyan novels, the love angle is mild here and the story moves at break neck speed. We are always in the thick of action with very less deviations. Definitely a good read.
Profile Image for V.J. Eshwar.
Author 2 books6 followers
August 28, 2014
of all the sandilyan books I read, I liked this one the most. unlike yavana rani which is a 2 part book which i first read and loved, this is a single part book. but the beauty of this novel is the sheer reality. politics, blood and betrayal. and yes there is love. a hero who would do anything for his love and a girl who could give anything for him. Just once I hate cholas.
2 reviews
April 15, 2023
சாண்டில்யன் அவர்களின் ஒரு அற்புதமான புதினம். போர்த்தந்திரம், காதல், இராஜதந்திரம், கூர்மையான அறிவுத்திறன் ஆகியவற்றை மிகவும் அழகாக ஒருங்கே இணைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். விறுவிறுப்பான திருப்பங்கள் குறைவாக இருப்பதை கண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட கதையைப் படிப்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது!
Profile Image for Siva.
6 reviews1 follower
February 14, 2020
There are some flaws here and there still good to read once.
Profile Image for DeenuDinesh.
2 reviews
Read
July 12, 2021
நான் படித்த முதல் தமிழ் சரித்திர நாவல்.💓💓💓💓💓
6 reviews
May 17, 2022
A classic

It's a beautiful book.. I used to read these in my childhood... Now reading them again... Chandilyan and Kalki are indeed the greatest historical fictions writers
2 reviews
August 15, 2024
It's my first Sandilyan book and my mom kept on recommending me this classic. Author teleports us to the 12th century Tamil Nadu and it's political landscape. Very descriptive in each chapter and equal importance is given to all major characters which makes sense when everything is brought together at the end. Slightly disappointed at the ending as I had expected something else. Nevertheless a great read.
1 review
September 28, 2025
கன்னிமாடம் நாவல் அருமை. சிங்களத்துப்பைங்கிளி கதாபாத்திரம் சூப்பர். அறிவு மற்றும் அழகு படைத்தவர். சூப்பர்
Profile Image for Aargee.
163 reviews1 follower
February 24, 2024
Again another awesome

Again another awesome novel by சாண்டில்யன் Sir that's as thrilling as கடல் புறா, ராஜமுத்திரை & யவன ராணி. Although this is a single novel, I couldn't put the book down until I finished reading.
Profile Image for Yadhu Nandhan.
260 reviews
August 27, 2021
ஒரு சிறு நிகழ்வை வைத்து ஒரு பெரும் கதையை எழுதுவதில் சாண்டில்யன் வல்லவர் . இந்த கதையிலும் அதை தான் செய்து உள்ளார். ஆனால் வழக்கமான சாண்டில்யன் கதைகளில் இருக்கும் அந்த அதீத விறுவிறுப்பு சற்றே குறைகிறது. இந்த கதை விறு விறுப்பாக தான் உள்ளது ஆனால் அது சாண்டில்யனின் தரத்தோடு பார்க்கையில் சற்று குறைவு தான் .
Profile Image for Varun Ragul.
23 reviews
March 15, 2021
Short one Book story. Brilliantly framed. It's about a Pandian seanthipathy how he with help of cholas saved his kingdom.
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.