Jump to ratings and reviews
Rate this book

உருவமற்ற என் முதல் ஆண்

Rate this book
சொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி வாழ்வதற்குத் தேவையான, இனிமையும் மனிதநேயமும் நிரம்பியது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஏராளமான பெருந்தருணங்களையும் கொண்டிருக்கும் தொகுப்பாக அமைந்திருந்திருக்கிறது.

168 pages, Paperback

First published December 1, 2019

1 person is currently reading
5 people want to read

About the author

K.V. Shailaja

15 books4 followers
K.V. Shailaja (b. 1969) is a Translator, writer and Publisher. She has introduced some of the best Malayalam works to Tamil readers through her translations, such as Chidambara Ninaivugal, Sumitra. She is Associated with Tamil Nadu Progressive Writers Association. K.V. Shailaja runs Vamsi Publishing along with her husband Bavaa Chelladurai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (18%)
4 stars
3 (27%)
3 stars
5 (45%)
2 stars
1 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sharavanan Kb.
35 reviews27 followers
December 23, 2021
எனக்கு தெரிந்து அதிக இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்களை பொதுவான நண்பர்களாக கொண்டவர்கள் பாவா செல்லதுரை , ஷைலஜா தம்பதியர்கள். அதைவிட நான் வியந்து பார்ப்பது அவர்களின் வாழ்க்கை பற்றிய அபிப்பிராயமும் வாழ்வை வாழும் விதமும் .

இயற்கை, இலக்கியம்,நிறைய நண்பர்கள் சூழ்ந்த அவர்களை பார்க்கும்போது எப்போதும் பெரும் மகிழ்ச்சியும் சில நேரங்களில் சிறு பொறமையும் ஏற்படுவதுண்டு. அவர்களின் முகநூல் பதிவுகள், வலைதளம், யூடியூப்பில் பாவாவின் கதை சொல்லும் விடியோக்கள் போன்றவற்றை தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்தாலும் இதுவரை அவர்களின் புத்தகங்களை படித்ததில்லை ஆகையால் இந்த புத்தகத்தையும் பாவாவின் பங்குகறியும் பின்னிரவுகளும் என்ற புத்தகத்தையும் வாங்கினேன்.

மொழிபெயர்பாளரும் எழுத்தாளருமான ஷைலஜா அவர்கள் கேரளாவில் பிறந்து திருவண்ணாமலைக்கு சிறுவயதில் குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர். இந்த புத்தகத்தில் அவரை தங்களின் மகளாக, சகோதரியாக,தோழியாக அன்பு செலுத்திய மணிதர்களை பற்றியும், தனது தாயை பற்றியும் ஒரு தாயாக தனது குழந்தைகள் பற்றியும், இலக்கியம்,புத்தகம்,வாசிப்பு,மொழிபெயர்ப்பு போன்றவற்றை பற்றியும் பகிர்ந்துள்ளார். 

நமக்கு தெரிந்த பிரபலங்கள் சிலரின் தெரியாத விஷயங்களை படிக்கும்போது சுவாரஸ்யத்தையும் , ஷைலஜா அவர்களின் வாழ்க்கை துயரங்களை படிக்கும்போது  வருத்தமும் ஏற்படுகிறது, இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் இவரது மொழிபெயர்ப்பு நூலான சிதம்பர நினைவுகள் மற்றும் மூன்றாம் பிறை புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். 
108 reviews2 followers
February 16, 2023
உருவமற்ற என் முதல் ஆண் -
கே.வி.ஷைலஜா

ஷைலஜாலின் வாழ்வில் தான் கடந்த மனிதர்கள், தனது நேர்காணல்கள் மற்றும் இரண்டு மேடைப்பேச்சுகள் கொண்ட தொகுப்பு.

இலக்கியம் சார்ந்த மனிதர்கள் அதிகம் கூறிய அழகிய இடம் பவா, ஷைலஜா அவர்களின் வீடு. என்றுமே இலக்கியம் பேச அங்கு தான் இடம் இருக்கும் என்று கூறுவார்கள்.

இந்த முழுக்க வியாபித்து இருப்பது ைஷ ல ஜாவின் வாழ்வு அவர் சார்ந்த மனிதர்கள். அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில புத்தகங்களை வாசித்துள்ளேன், பலவற்றை வாசித்தல்லை. வாசிக்கும் ஆவல் எழுந்துள்ளது..

தன்னை சுற்றி இப்படியான அன்பு ததும்பும் மனிதர்கள் எனக்கு கிடைக்க நான் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது படிப்பினை.
January 21, 2021
K.V. ஷைலஜா அவர்களின் புத்தகங்களில் நான் வாசித்த இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் சிதம்பர நினைவுகள்.

பவா செல்லத்துரை போலவே இவரும் ஒரு தேர்ந்த கதை சொல்லி. ஒரு கதையாடலில் இவர் சொன்ன எஸ்.ராமகிருஷ்ணனின் அவளது வீடு, பாலச்சந்திரன் சுள்ளிகாகடு அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்களில் ஒரு பகுதியாக வரும் திருவோணம், ஒ.ஹென்றியின் பெண்டுலம் மற்றும் Color purple கதைகள் எனக்கு நினைவிருந்தாலும் இந்த புத்தகத்தின் வாயிலாக எழுத்து வடிவமாக நுகர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.
இவரது பூர்வீகம், கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தது, த மு எ ச சேர்ந்தது, பவாவை சந்தித்தது என இவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து இவர் முன்பகுதியில் தொகுத்து பின் பகுதியில், இவரது நேர்காணல், பேருரை என இந்த புத்தகத்தை ஒரு மறவா நினைவுப் பெட்டகமாய் நிரப்பி நமக்கு தந்திருக்கிறார்.

மிக எளிமையான நடையில் தன்னுடைய எளிமையான வாழ்க்கை அனுபவங்களையும், முக்கியமாக பெண் சார்ந்த உணர்வுகளையும், மிக முக்கியமாக மனித நேயத்தையும் மிக லாவகமாக நம்மில் செலுத்தும் அனுபவமாக இருந்தது. பவா வின் துணைவி அல்லவா? மனித நேயம் நிரம்பி இருக்கத்தானே செய்யும்?

சிதம்பர நினைவுகள் போல இந்த வாசிப்பும் என் வாழ்க்கையில் நான் செலவிட்ட இனிய பொழுதுகள்.

இந்த வாசிப்பின் வாயிலாக J.P. சானக்கியா என்ற எழுத்தாளரின் அறிமுகம் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி!

ஷைலஜா அவர்கள் ஒரு பக்கம் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தி கொண்டு, மற்றொரு பக்கம் இது போன்று கட்டுரை தொகுப்பை அவ்வப்போது எழுதி வெளியிடலாம், இவரின் எழுத்து அவ்வளவு சுவையாக இருக்கிறது.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.