Jump to ratings and reviews
Rate this book

விலை ராணி

Rate this book
திர்பாராத விதமாக எதிரே வழியை மறித்து நின்று, தான் விலைக்கு வாங்கிய வடிவழகியை ‘இவள் விற்பனைக்கு இல்லை' என்று கூறியதல்லாமல், 'கழுகு புறாவைக் கொத்திக்கொண்டு போக முடியாது' என்று தன்னைக் கழுகாகவும், தான் வாங்கிய அழகியைப் புறாவாகவும் வர்ணித்த யவன ராட்சதனை, அந்த விகாரமுக வாலிபன் ஒரு விநாடி ஏற இறங்க நோக்கினான். எதிரே நின்ற யவனன் பார்ப்பதற்கு உண்மையில் மிகப் பயங்கரமாயிருந்தான். அவனுடைய நல்ல உயரத்தை, எட்டு சாண்களுக்குக் குறைவில்லாத குறுக்குச் சதைப்பிண்டம் சிறிது குறைத்துவிட்டதால், அவன் உடலமைப்பு விகாரமாகவே தெரிந்தது. அவன் உருண்டைத் தலையும், புடைத்த கன்னச் சதைகளில் மறைந்து மிகச் சிறிதாகத் தெரிந்த சிறு கண்களும், விசாலமான கெட்டி மார்பும், கருங்கல்லா

551 pages, Kindle Edition

Published July 16, 2021

34 people are currently reading
506 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
38 (26%)
4 stars
38 (26%)
3 stars
43 (29%)
2 stars
15 (10%)
1 star
10 (6%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Avanthika.
145 reviews854 followers
March 3, 2018
கதை நகர்வு சுவாரசியம் எனினும் பெரும்பாலும் புனைவு. வீரகுப்தனை பற்றிய சரித்திர குறிப்புகள் இல்லை.
சாணக்கியன், சந்திரகுப்தன் தவிர அனைத்து சரித்திர நாயகர்கள்/நாயகிகள் பெயரும் மாற்றப்பட்டுள்ளன. கிரேக்கர்கள் சம்பந்தப்பட்ட பெயர்கள்/கதை புனையப்பட்டுள்ளது.
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
May 25, 2021
A worthwhile reading on the background story of Mauryan empire foundation and the story line makes it very interesting throughout with great suspense and intellect.. the strong mastermind in the history is epic.. and his intellectual moves are well narrated.. am all in 5 stars for the book except for the certain romantic parts which I find as unfitting.. overall it can be found so interesting to finish in a couple of days..
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
சந்திரகுப்த மெளரியரின் அரசு ஏற்பட்ட விதமும் அதன் விஸ்தரிப்பும் சாணக்கியரின் தந்திரத்தாலும் வீரகுப்தனின் வீரத்தாலும் எளிதாக நடந்தேறிய விதம் நன்றாக கூறப்பட்டுள்ளது.
Profile Image for Sekar S.
22 reviews4 followers
May 9, 2022
அற்புதமான வரலாற்று புதினங்களில் ஒன்று. பொன்னியின் செல்வனைப் போல கதையின் நாயகன் மன்னன் அல்லன்.
Profile Image for Aargee.
163 reviews1 follower
November 15, 2024
Fantastic fiction built around Chandragupta Maurya capturing Magadha empire
Profile Image for Veera Ragavan.
1 review
Read
August 17, 2016
I WANT THIS BOOK TO READ
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.