ஏதாவது சிறு சம்பவம்தான் கருவாகி பின் கதையாக வளர்கிறது. அது ஆயிரத்து தெளாயிறத்து எழுவத்தி மூன்றாம் வருடம்தான், நான் பெங்களூரில் இருந்து ஐலண்ட்டு எக்ஸ்பிரசில் கோவை போய் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்தது, ஒரு உட்காரும் இடம்தான், படுக்கை வசதியுள்ள பலகை கிடைக்க வில்லை. மறுநாள் கோயமுத்தூரில் இருந்தே ஆகவேண்டும். கேஸ்தான் வேறேன்ன. நிஜமாகவே புஷ்பாவை பார்த்தேன், அவள் அண்ணன் ஒரு வனையும் சந்தித்தேன். முதலில் அறிமுகமானது அந்த பையன்தான். நான் வக்கீல் என்றதும் ஆச்சரியப்பட்டான். புஷ்பாவிடம் என்னை அறிமிகம் செய்தான், புஷ்பா, அழகிதான். எனக்கு வர்ணிக்க வார்த்தைகளை கிடைக்காத அளவு அழகி. சகஜமாக பேசினாள். ஆங்கிலத்தில்தான். எனக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது.