Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா நாவல்கள் சுகமாகப் பயணிப்பது மட்டுமல்ல, யதார்த்த விஷயங்களின் வர்ணிப்பில் ஒரு அழகு மிளிறும். பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போது அவர்களைப் பற்றி 'நச்' சென்று சிறு அறிமுகம் வாசகர்களுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தும்.
பயந்த நிலையில் ஒரு பெண், லாயர் கணேஷை சந்திக்க கோர்ட்டுக்கே வருகிறாள். அவளை அன்று மாலை தன் அலுவலகத்தில் சந்திக்குமாறு கணேஷ் கூறுகிறான். அந்தப் பெண் அன்றிரவு ஒரு சாலை விபத்தில் இறக்கிறாள். கணேஷ் அலுவலகத்தில் அவளால் ஒரு பேப்பரில் ஏதோ வட்டங்கள் வரையப்பட்டு கசங்கப்பட்ட நிலையில் கிடக்கிறது. விபத்தில் இறந்த பெண் பரிமாறிய தகவல்கள் தெரிவிக்காப்படில் அந்தப் பெண்ணிற்கு நேர்ந்த கதி கணேஷுக்கு ஏற்படும் என்று ஒரு மர்ம ஆசாமி கணேஷை போனில் மிரட்டுகிறான். சென்னையில் ஒரு நடனக்குழு ஒரு பெர்ஃபாமன்ஸ் பண்ண ஜெர்மனி மியூனிக் நகரம் செல்கிறது. கணேஷும் அவன் அசிஸ்டன்ட்டும் போலீஸ் உதவியோடு ஜெர்மனி மியூனிக் நகரத்திற்கு அனுப்பப் படுகிறார்கள். அங்கு இருவரும் ஜெர்மனி போலீஸ் உதவி கொண்டு மர்ம முடிச்சுகளை எப்படி அவிழ்க்கிறார்கள் என்பதுதான் கதை.
சில சுவாரஸ்யமான வர்ணணைகளில் மயங்கினேன்.
இதோ சில.........
பிளாட்பாரத்தில் நடக்கும் போது.........
"இஜ்ஜாதகருடைய கையில் தனரேகை தீர்க்கமாக இருப்பதால், வருகிற தை மாதம் பதினைந்து தேதிக்குள் திரவியங்கள் செழித்துக் கொட்டத் தொடங்கும்’ என்று ஒரு லென்ஸ் மூலம் சவலைக்கையைப் பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருந்தான், எட்டணா ஜோசியன். சிறகு ஒடிந்த கிளிகள் அழுக்குச் சீட்டுகளைப் புரட்டித் தேர்ந்தெடுத்து விட்டு நெல்மணிகள் பெற்றுக் கொண்டு சமர்த்தாகத் தம் சிறைக்குத் திரும்பின. ஒரு பெண் பிளாட்பாரத்தில் அழுது கொண்டிருந்தாள். ஆயிரம் பேர் கவனிக்காமல் நடந்து சென்றார்கள். கணேஷும் வஸந்தும் கீதா பவனுக்குச் சென்று பாம்பே மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள்."
கோர்ட்டுக்குள்.........
"கோர்ட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவள் இல்லை. கோபாலாச்சாரியார் மேலும் பொய்களை ஜோடித்தார். நீதிபதிக்கு அருகில் இருந்த டைப் இயந்திரம் அவற்றை ஒன்றுவிடாமல் வாங்கி அடித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ்காலத்து மின்விசிறி ஒன்று குய்க் குய்க் என்று சுற்றிக்கொண்டிருந்தது. கணேஷ் வாதாடும் வழக்கு, அதன் ஆறாவது வருஷத்தில் இருந்தது. யார் ஜெயித்தாலும் தோற்ற கட்சி அப்பீல் செய்யப்போகிறது. சுப்ரீம் கோர்ட்வரை அது நிச்சயம் செல்லும்."
ஒரு நடனப்பள்ளியில்......
தக்க ஜம்! திரிகிடஜம்! ஜில்பா வைத்துக்கொண்டு ஒருவர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு கையில் சின்ன ஜால்ரா வைத்துக் கொண்டு சொல்லுக் கட்டுகளை உச்சரிக்க, மொஸாய்க் இழைத்த அந்த ஹாலில் எட்டு ஒரே சைஸ் பெண்கள் சதங்கை ஒலிக்க நடனம் செய்து கொண்டிருந்தார்கள். பின்னால் நடராஜர் சிலை, ஊதுவத்திப் புகை. அந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தவர்கள் போல் தெரிந்தார்கள். ஒரே உயரம், ஒரே உடற்கட்டு, எல்லாரும் ஒரே சமயத்தில் புன்னகை செய்தபோது, பல்வரிசைகள்கூட ஒரே மாதிரி இருந்ததாகத் தோன்றியது. இப்போது அவர்களில் ஒருத்தி மட்டும் சற்று முன்வந்து அபிநயித்தாள். நட்டுவாங்கம் செய்பவர் கண்களில் மை இருந்தது. பக்கத்தில்வெற்றிலைச் செல்லம் இருந்தது. பாதி நடனத்தில் பஸ்ஸர் ஒலித்தது. அடாணா ராகத்தின் மத்தியில் ஒரு அபசுரமாக 'விர்ர்ர்' என்றது. அந்த முன்னணிப் பெண் அலுத்துக்கொண்டாள். நடனம் நின்றது. பெண்கள் நெற்றி வியர்வையை ஒத்திக்கொண்டார்கள். ‘ராஜி யாரு பாரு.’
சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு காட்சி......
"சென்ட்ரல் ஸ்டேஷனை அவர்கள் வந்தடைந்த போது மாலை ஆறு மணியிருக்கும். டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள். இரைச்சல். இரண்டாயிரம் ஜனங்கள், ‘ஆ’ என்று போர்டைப் பார்த்துக்கொண்டு, டிக்கெட் வாங்கிக் கொண்டு, திருதிரு என்று விழித்துக் கொண்டு, பால் சாப்பிட்டுக் கொண்டு, பத்திரிகை வாங்கிக் கொண்டு........
விமானம் டேக்ஆஃப் ஆவதற்கு முன்.....
"அந்த ராட்சச விமானம் எக்கச்சக்கமாக இரை விழுங்கின மலைப்பாம்பு போல் மெல்ல ஊர்ந்து திரும்பி, அதுவா பறக்கப் போகிறது என்ற ரீதியில் டேக் ஆஃப் ஓட்டத்தைத் துவங்கியது."
ஜெர்மனி போலீஸ் அதிகாரிகள் பற்றி......
"ஸ்டைன்ஹாஃபுக்கு ஐம்பது வயதிருக்கும். காலேஜ் புரொபசர் போல் இருந்தார். சதுரமானஉடலமைப்பு. சிவப்பும் நீலமும் கலந்து உன்னதமான சூட். சொற்ப மயிரைத் தழைய வாரியிருந்தார். ஃப்ரேம் இல்லாத மக்னாமரா மூக்குக்கண்ணாடி. கண்கள் நீலமாக இருந்தன. முகத்தில் சமீபத்திய ஷவரப் பச்சை.
ஹோனிஷ் இளைஞன். செம்பட்டைத் தலை. நீலமான கண்கள். நீலக்கண்களை நிறைய சந்திக்கப்போகிறோம் என்று பட்டது கணேஷுக்கு. மெலிய உதடுகள், சற்று நீண்டு மூஞ்சி. துருதுருப்பான பார்வை. கட்டம் கட்டமாக சட்டை போட்டுக்கொண்டு ஜீன்ஸ்அணிந்திருந்தான். அவர்களைப் பார்த்தால் போலீஸ் ஆபீசர்கள் மாதிரிச் சொல்ல முடியாது."
மியூனிக் நகரத்தில்.......
"மியூனிக்! மேற்கு ஜெர்மனியின் பெருமை நகரம். பவேரிய ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்த தொழிலும், கலையும், அழகும், சுத்தமும் அபரிமிதமான நகரம். பிளாட்பாரத்தில் நடந்தார்கள். சூரியன் உறைக்கவில்லை. சில்லென்று கத்திக்குத்து போல் காற்று. கண்ணாடிக்குப் பின் பியானோக்கள். ஜன்னல்களில் ரத்தச் சிவப்பில் ட்யூலிப் மலர்கள். இப்போதுதான் ஃபாக்டரியிலிருந்து வெளிவந்தது போல் புதிய பஸ்கள்! டிராம்கள்."
மியூனிக் நகரத்தில் ஒரு ஹோட்டலில்........
‘அரிசி இருக்கிறதாஎன்று ஜெர்மனியில் எப்படிக் கேட்பது?’ ‘ஹாபன்ஸி ரய்ஸ்.’
'ஹாபன்ஸி ரய்ஸ்'
என்று அந்த ரெஸ்டாரண்டில் கேட்டார்கள்.
'யோயா’ என்று தலையாட்ட அப்பாடா என்று இரண்டு ப்ளேட் ஆர்டர் செய்தார்கள். பொறுக்கிப் பத்துப் பதினைந்து அரிசியை அரை வேக்காடாக வைத்து, சுற்றியும் சில தழைகளை அமைத்துக் கொண்டு வந்து வைத்தான் வெய்ட்டர். ஓரத்தில் உப்பில்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு. சாப்பிட்டுப் பார்த்தார்கள். ‘ரெண்டு நாளில நாக்கு செத்துப் போய்ரும் போல இருக்கு! நல்ல நார்த்தங்காஊறுகா கிடைச்சா நாக்கில் தேச்சுக்கணும் போல இருக்கு........ "
Inspite of spending arnd 10 hrs in office finished reading this novella in a single day...i couldn't put this book down...such an entertaining and nail biting read!!!