சுழற்சிதான் வாழ்க்கை! சுழற்சி நிற்கும் போது எல்லாம் முடிந்துவிடும். ‘காலச்சக்கரம்’ எனும் எனது முதல் நாவலின் சுழற்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது! நாவலைப் படித்துவிட்டு தொலைபேசி மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் நிறையப்பேர் தொடர்பு கொண்டு பாராட்டுகளை குவித்துவிட்டனர். வாலியின் திருக்கரத்தால் வெளியிடப்பெற்று, கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்களின் கரங்களில் இதன் முதல் பிரதி தவழ்ந்து, இயக்குனர்கள் ‘சித்ராலயா’ கோபு, முக்தா ஸ்ரீனிவாசன், எழுத்தாளர்கள் அசோகமித்திரன், அகஸ்தியன், பத்திரிகையாளர் ஷண்முகநாதன், வானதி திருநாவுக்கரசு, திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், குமாரி சச்சு போன்ற ஜாம்பவான்களின் ஆசி பெற்ற இந்த படைப்பு, வெற்றி பெற்றதில் வியப்ப&
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.
தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.
A huge treasure of gold appears in a mountain after a solar eclipse and it was warned by a priest that anyone taking possession of that gold could have serious misfortune slapped on them. But the greed as expected overrides the warning and the story unfolds to explain how Hoysala king and Pandiya kings were affected. Major part deals with the problem caused for Srirangam temple.
இலஞ்சமும், ஊழலும் இரண்டும் ஒன்று தானே? கலி சூதாட்டம், மது, மாதுவுடன் மாமிசத்தையும் தன் ஆயுதங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்ததை முதலில் ஏற்கவில்லை. இக்காலங்களில் இந்து தீவிரவாதிகள் மாட்டுக்காக செய்யும் கொலைகளால் நம்ப வேண்டியுள்ளது. மற்றபடி சாதாரண கதை.
கடைசில வாசகர்களை சபிப்பது போல முடித்து விட்டார். ஆனால் தாயாரின் விரல் பதித்த 5 குழிகளும் கேடு செய்வது போல எழுதி இருப்பது ஏற்க தக்கதல்ல. நெருடலாக இருக்கிறது
Good story but it is the style of kalachakram narasimaan to set a good stage in first half and rush it in second half. Last 100 pages is kind of rushed to finish it off