Jump to ratings and reviews
Rate this book

தலித்துகளும் தண்ணீரும் (Thalithukalum Thanneerum) (Research Work)

Rate this book
நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட்டுகிறது. மேலும் அதிகாரத்தின் இரண்டகத்தையும் அதிகாரத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த தலித் பிரதிநிதிகளின் செயலையும் சுயவிமர்சனம் செய்கிறது. சாதியம் தொடர்பான ஆய்வுகள் பெரிதும் ஆங்கிலத்தில் அமைய, ஒருபொருள் குறித்து விரிவான ஆய்வாகத் தமிழில் இந்நூல் வெளிவருகிறது.The battle of the dalits for their rights over water is recorded historically in this book.

194 pages, Kindle Edition

Published December 1, 2011

3 people want to read

About the author

கோ. ரகுபதி

11 books1 follower
கோ. ரகுபதி (பி. 1975) சாதி குறித்த ஆய்வில் ஈடுபாடுடையவர். ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ (2006) இவருடைய முதல் நூல். தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டுவரும் சமூக விலக்கல் மற்றும் உட் கொணர்வுக் கொள்கை ஆய்வு மையத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Kalyanakannan padivasu.
9 reviews
November 16, 2021
உங்கள் நேரம் அனுமதிக்கும் பொழுது வாசியுங்கள். உலகம் முழுதும் பெரும்பாண்மை தண்ணீர் பிரச்சனை வர்த்தகரீதியாக அணுகும் பொழுது இதில் அப்பிரசனை எப்படி சாதியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று பேசுகிறார். தண்ணீர் சார்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்த தீண்டாமையை களைந்து இருக்கிறோமா? இல்லை தனி கிணறு மற்றும் தொழிநுட்பத்தின் மூலம் அதை மூடி மறைத்து இருக்கோமா? என்று கேள்வி எழுப்புகிறார். பொது என்பதன் முழு அர்த்தத்தை இந்த சமூகம் உண்மையில் புரிந்துவைத்து இருக்கிறதா?
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.