What do you think?

நாகதீபம்
சரத்காலச் சந்திரன் வானிலிருந்து வீசிய முழு இன்ப ஒளியில். கூடாரத்தின் வாயிலில், மோகனாகரமாக நின்ற அந்தப் பருவ மங்கையின் பேரெழிலைப் பார்த்துப் பார்த்து பிரமித்து, நீண்ட நேரம் நின்றுவிட்ட ஹரிதாஸ் ஜாலாவின் மனோ நிலை விவரிக்க முடியாத அளவுக்குக் குலைந்து கிடந்தது. தோப்பின் மரங்களிலிருந்து எழும்பிய காற்று அவள் உடலில் பாய்ந்து அலை அலையாக அவள் சீலையைப் புரட்டிக் கொண் டிருந்தது கூட தன் எண்ணங்கள் அடியோடு நிலை குலைந்து போவதற்குத்தான் என அவன் எண்ணினான். பக்கத்தில் பாலைவனச் சுனையில் அரை முழங்கால் நீரில் தன்னுடன் நின்றிருந்த புரவியைத் தேய்க்கத் தண்ணீரில் பிழிந்து எடுத்திருந்த துணியை அவன் கை பற்றியிருந்ததேயொழிய, குதிரையைத் தேய்க்கும் திறனை இழந்து க&
- GenresHistorical Fiction
270 pages, Kindle Edition
First published February 1, 1966
About the author
Sandilyan
77 books396 followersSandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 7 of 7 reviews
December 5, 2017
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டிற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கமே அடங்கி இருக்கும்.
ராஜபுத்திரனான ஹரிதாஸ் ஜாலா போரில் மொகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைவாசத்தில் இருந்தவனை அரசர் ஜஹாங்கீர் விடுதலை செய்கிறார்,அதற்காக மேவார் ராணாவிடம் இருக்கும் குடும்ப சொத்தான நாகதீபம் என்றழைக்கப்படும் ரத்தினத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் போர் நடவடிக்கைகள் அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் மீது தொடுக்கப்படாது என்ற உறுதியையும் அளிக்கிறார்.
மேவார் ராணாவிடம் படைத் தளபதியாக இருந்த ஹரிதாஸ் ஜாலா தற்போது மொகலாயத் தூதுவனாக மாறி நாகதீபத்தைக் கைப்பற்ற ராஜபுதனத்திற்குச் செல்கிறான்,அவர்களின் பிதாமகரான ஜயன் சந்தாவத்தின் மூலம் சிறுவயதில் அவரின் பேத்தியை தான் திருமணம் செய்து கொண்டது விவரம் அறிய நேர்கிறது.
ராஜாபுதனப் பெண்ணான பிதாமகரனின் பேத்தி மொகலாயத் தூதுவனாக மாறிய ஹரிதாஸ் ஜாலாவை கணவனாக ஏற்க மறுப்பவள் அவனின் உள்ளத்தில் புதைந்து கிடந்த துன்பத்தைத் தெரிந்த பின்பு அவனுடன் வாழ விரும்பினாலும் ஹரிதாஸ் ஜாலாவால் தான் செய்து கொண்டிருக்கும் தூதுவனான தவறை நினைத்து எதிலும் விருப்பத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது.
எதற்காகத் தூதுவனாக வந்தானோ அந்த நாகதீபத்திற்குப் பதினைந்து நாள் காவலாக இருக்கும் பொருட்டு மேவார் ராணா ஹரிதாஸ் ஜாலாவிடமே அதை ஒப்படைக்கிறார்.அதன் முடிவில் ஜஹாங்கீர் மகனிடம் அதைக் கொடுத்து தன் ஆணையை முடித்துக் கொண்டவன் மொகலாயர்களை எதிர்த்து போரிட விரும்பியதை அவனின் ராணாவாலே தடுத்து நிறுத்தப்படுகிறது.
பிதாமகரையும் போரில் இழந்தபிறகு நாட்டில் இருக்கும் எஞ்சிய உயிர்களுக்காகச் சமாதானத்திற்கு மேவார் ராணா உடன்படுகிறார் அதை முன்னின்று ஹரிதாஸ் ஜாலா செயல்படுத்துகிறான்.

July 9, 2026
As every other Sandilyan’s book, this book was interesting too with a plot based on historical events. I would’ve given five star if it’s not for too much romance.
February 23, 2024
சாண்டில்யன் வீரம் காதல் மற்றும் துரோகம் என ஒரு சரித்திர கதைக்கு என்ன தேவையோ அதை கலந்து எழுதிய கதை நாக தீபம் இது மிகவும் சுவாரசியமானவை படிக்க படிக்க எதோ நாமும் ஹரிதாஸ் ஜாலா உடனே ராஜபுதினத்தில் பயணிப்பது போல் இருக்கும். அமர சிம்மன் ஜஹாங்கீர் உடன் சமாதானம் செய்து கொள்ளும் போது இந்த நாக தீபத்தை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறி கதையை தொடங்குகிறார் சாண்டில்யன் இறுதி வரை மிகவும் சுவையுடன் கதையை ஓட்டி சென்று இருக்கிறார் படித்து பாருங்கள் மிகவும் அருமையான கதை
This entire review has been hidden because of spoilers.
April 4, 2023
Not so impressed …very ordinary novel on Rajputs
September 10, 2024
Fantastic novel by Sandilyan Sir talking about Rajputs & their cold battle with Kurram aka Shajahan & his Father Jahangir
This entire review has been hidden because of spoilers.
June 12, 2026
சாண்டில்யனின் 'நாக தீபம்' [Naga Deepam] ஒரு சுவாரசியமான வரலாற்று நாவல். இது ராஜபுத்திரர்களின் வீரம், காதல் மற்றும் ரகசிய மாணிக்கம் ஒன்றின் பின்னணியில் புனையப்பட்ட ஒரு சாகசக் கதையாகும்.
October 7, 2021
"நாக தீபம்" - சாண்டில்யன்
************************
வரலாற்று காலத்தை கொண்ட புனைவு நாவல்களில், சாண்டில்யன் அவர்களின் படைப்புகள் தலைசிறந்தவை எனலாம்.
அந்த வகையில், இந்திய வடமேற்கு பகுதியான ராஜபுதன பாலைவனங்களில், அதனை ஒட்டிய முகலாயர் படையெடுப்புக்குள்ளான பகுதிகளில்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. முகலாயர் காலம் என்பதால் 13ம் நூற்றாண்டில் இக்கதை நடைபெற்றதாக கொள்ளலலாம்.
முகலாயர் சிறையில் அடைபட்ட ராஜபுதனத்தின் படைத்தளபதிகள் ஒருவனான "ஹரிதாஸ் ஜாலா"தான் கதையின் பிரதான பாத்திரம். தன் நாட்டின் மீது மிகுந்த பற்றுள்ளவனை, "நாகதீபம்" எனும் ராஜபுதனத்தின் பொக்கிஷத்தை கொணர, விடுதலை செய்யப்படுவதாக ஆரம்பிக்கிறது.கதை.
அப்பயணத்தில் ஹரிதாஸ் ஜாலா சந்திக்கும் ராஜபுத்திரியுடனான சந்திப்பு, விரோத மொழியில் ஆரம்பித்து, மூத்த படைத்தளபதியான பிதாமகர் மூலம், அவர்களுக்குள் காதல் மொழியாக தொடர்கிறது. மேலும், சுந்தரதாஸ், ராஜ்புத்தின மன்னர் அமரசிம்மன் ராணா என பல்வேறு கதைமாந்தர்களும் இடம்பெறுகிறார்கள்.
அந்த "நாகதீபம்" எப்படி ஹரிதாஸ் ஜாலா கைக்கொள்கிறான், ராஜபுத்திரி-ஹரிதாஸ் காதலை பிரிக்க சுந்தரதாஸ் செய்யும் சூழ்ச்சிகள், முகலாய ஜஹாங்கீரிடம் நாகதீபத்தை ஒப்படைகிறானா, முகலாயருடன் போரில் ஈடுபடுகிறானா? என்பதெல்லாம் மீதி கதையாக செல்கிறது.
நாட்டுப்பற்று, காதல், துரோகம், சூழ்ச்சி போன்ற பல, கதைமாந்தர்களின் உணர்வுகளை, வாசிப்பவருக்கு கடத்தப்படுகிறது. தொடராக வெளிவந்ததால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'முன்கதை சுருக்கம்' போல, ஓரிரு பத்திகள் அடுத்த அத்தியாயத்திலும் எழுதப்பட்டுள்ளது, சற்றே அயர்வை தருகிறது.
ஹரிதாஸ் ஜாலா'வின் பாலைவன குதிரைப்பயணம், 'பொன்னியின் செல்வன்'-ன் வந்தியத்தேவனை ஞாபகடுத்துகிறது.
சுவாரசிய வாசிப்புக்கு ஏற்ற நாவல்!