✅சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதிய மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய புத்தகம் அள்ள அள்ள பணம் வரிசையில் ஆறாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ✅இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய புத்தகம். 130 பக்கங்களை உள்ளடக்கிய மிகச்சிறிய புத்தகம் தான். ✅காலம் மாறிவிட்டது , பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் தற்பொழுது எல்லாம் வங்கிகளின் பிக்சட் டெபாசிட்களை தவிர்த்து இப்பொழுது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். காரணம் வங்கிகள் தரும் பிக்சர் டெபாசிட்ட்களின் வட்டிகளை விட மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் லாபம் அதிகம். ✅மியூச்சுவல் ஃபண்டுகளில் பணம் இழக்கும் அபாயங்களும் உண்டு. எனவே அவற்றைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது சரியான விஷயமாக இருக்கும். ✅இந்தப் புத்தகம் முழுமையாக அவற்றைத் தான் விளக்குகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அது தரும் வட்டி விகிதத்தை பற்றியும் அதன் சில அபாயங்களையும் விளக்குகிறது. ✅நீங்கள் இப்பொழுது தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றால் இந்தப் புத்தகம் நிச்சயமாக உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ✅ஆனால் இதுவரைக்கும் எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எந்த அனுபவம் இல்லை ஆனால் அதில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளது என்று நினைப்பவர்கள் தமிழில் நிறைய you tube சேனல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்த்துவிட்டு இந்த புத்தகத்தை மேற்கொண்டு படிப்பது உங்களுக்கு ஆழமாக பெறுவதற்கு உதவியாக இருக்கும். எப்படி இருந்தாலும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது இந்த புத்தகம் உங்கள் அலமாரியில் வைத்துக் கொள்வது, உங்களின் சந்தேகங்களை அப்பப்போது படித்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
மியூச்சுவல் பண்டு குறித்தான அடிப்படை தகவல்களை விரிவாக வழங்கியுள்ளார் ஆசிரியர் சோம வள்ளியப்பன். இருப்பினும் வரைபடத்துடன் விளக்கி இருக்கலாம். முதல் பதிப்பு என்பதால் சற்று அச்சுப்பிழைகளும்.