Jump to ratings and reviews
Rate this book

இந்திய பயணங்கள்: Indhiya Payanangal

Rate this book
சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும்கூட தமிழருக்கும் தெலுங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அவ்வளவு வித்தியாசம் அவர்களிடையே. கோவானியப் பெண்கள் நல்ல தேகக்கட்டுடையவர்கள். அவர்களில் சிலர் சுருட்டுப் பிடிப்பார்கள். பாதிபிடித்த சுருட்டை அணைத்துவிட்டு, அதைக் கூந்தலில் செருகிக் கொள்வார்கள். நமது நாட்டில் பூ வைத்துக் கொள்வது போல கூந்தலில் அவர்கள் சுருட்டு வைத்துக் கொள்வார்கள்! கோவாவிலுள்ள ரயில் நிலையங்களில் சாமான் தூக்கும் கூலிகளில் பெரும்பாலோர் பெண்களே.

98 pages, Kindle Edition

Published September 13, 2020

24 people are currently reading
9 people want to read

About the author

A.K. Chettiar

11 books3 followers
A. K. Chettiar (3 November 1911 – 10 September 1983) was an Indian travelogue writer, journalist and documentary film maker from Tamil Nadu, India. He is most notable for pioneering travelogue writing in Tamil and for his documentary on Mahatma Gandhi.

Born in Nattukottai Nagarathar Family in Kottaiyur in Madras Presidency, A. Karuppan Chettiar finished his schooling in Tiruvannamalai. He was interested in travelling and started on a world tour in the 1930s. In 1935, he went to Japan to learn photography at the Imperial College of Technology, Tokyo and studied there for a year. In 1937, he joined the New York Institute of Photography and completed a one-year diploma course in photography.

Chettiar is considered as "one of the foremost writers of modern travelogues in Tamil". He collected more than 140 travel essays in Tamil belonging to the 1825–1940 period, edited and published them as a book in 1940. His own travel essays were published first in 1940 as Ulagam surrum Tamilan (The Globe Trotting Tamil). He has written a total of seventeen travel books.

Chettiar first published a Tamil magazine called Dhanavanigan in Burma when he was twenty years old. In 1930, he helped to set up the magazine Ananda Vikatan. From 1943 till his death in 1983, he edited and published Kumari Malar from Chennai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (36%)
4 stars
7 (21%)
3 stars
13 (39%)
2 stars
1 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
108 reviews3 followers
May 25, 2023
இந்திய பயணங்கள்
ஏகே செட்டியார்
சந்தியா பதிப்பகம்

பயண கட்டுரைகள் வாசிப்பது என்பது ஒரு அலாதி, பயண கட்டுரைகளின் வாயிலாக நாமும் அந்த இடத்துக்கே, அந்த ஊர்களுக்கே சென்று விட முடியும் என்று நான் நம்புகிறேன்.
நான் வாசிப்புக்குள் நுழைந்த பொழுது என்னை ஆட்கொண்டது இந்த பயண கட்டுரைகள் தான்.

ஒரு சிறு வாசிப்பு ஆயினும் நான் மிகவும் அறியப்படாத பல சுவாரசியமான தகவல்களை அந்தந்த ஊர்களை பற்றி நான் தெரிந்து கொண்டேன். 1930-40களில் தமிழகம் அதன் நிலவியல் எப்படி இருந்தது என்று எளிதாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி பற்றி இவ்வளவு நாள் எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்தேன் என்ற கேள்வி என்னில் எழுந்தது. செஞ்சிக்கோட்டையை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற ஊர்களின் அப்பொழுது எவ்வாறு இருந்தது என்ற பிம்பம் கண் முன் தோன்றி மறைகிறது.

பயணமற்ற வாழ்வு ஒரு காற்று இல்லா கோடையே!
June 29, 2025
தமிழில் பயண நூல்கள் எழுதியவர்களில் முன்னோடியானவர் ஏ.கே.செட்டியார் அவர்கள். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்து வந்த காலத்திலேயே இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர் அவர்.

இவரது நூல் "ஏ.கே.செட்டியார் பிரயாணக் கட்டுரைகள்" என்ற 1954ல் வெளியானது. அவற்றை தற்போது சந்தியா பதிப்பகம் மறுபதிப்பு செய்து "இந்தியப் பயணங்கள்" என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

இந்த புத்தகத்தில் 18 பயணக்கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த தம் அனுபவங்களை எழுத்தின் வழியே வடிவமைத்திருக்கிறார். பயண அனுபவங்கள் ஊடாக வரலாற்றுத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன.

தற்போது நவீன போக்குவரத்து வசதிகள், பயணத்தை எளிதாக்குகின்றன. ஆனால் 1940களில் கதையே வேறு. பெரும்பாலும் ஆங்கிலேய வருகையின் பிறகே ரயில் வசதிகள் வந்தன. அன்று நெடுந்தூரப் பயணத்திற்கு வசதியானவை ரயில்கள் தான். ரயில் வசதிகள் இல்லாத இடங்களுக்கு, மாட்டுவண்டிகளையோ, டிராம் வண்டிகளையோ, ரிக்சா , குதிரை வண்டிகளையோ தான் நம்பி பயணம் செய்ய வேண்டும்.

அப்படி ஆங்கிலேய இந்தியாவை முழுவதும் சுற்றிப் பார்த்தவர் ஏ.கே.செட்டியார் அவர்கள். இவரது நூல்கள் யாவும் அன்றைய இந்தியாவினைப் படம்பிடிக்கும் ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.
தமிழர்கள் மட்டுமன்றி இந்தியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள "இந்தியப் பயணங்கள்" என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில், பக்கம் எண்.68-ல் முதல் பத்தியில் அச்சுப் பிழை உள்ளது.
2 reviews
March 11, 2023
ஏ. கே.செட்டியாரின் அபாரமான மொழி

மிக அருமையான புத்தகம். பயணம் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டவரான ஏ.கே.செட்டியார், தாம் சென்ற இடங்களைப் பற்றி எழுதிய சுவாரஸ்யமான பதிவு இந்நூல். ஒரு பீரியட் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.செட்டியாரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. ரசித்து வாசிக்கத் தகுந்த புத்தகம்.
Profile Image for Jayashree.
28 reviews4 followers
February 16, 2025
A short and sweet ride to India in the 50s or 60s, probably.
Even if the language is not that great as that of a professional writer, the narration flows easily and his cheeky comments here and there make the book a good read.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.