Jump to ratings and reviews
Rate this book

துனியா

Rate this book
தனிமனித மனதிலும் சமூக மனதிலும் மதவாதம் கொந்தளிக்கும்போது, மக்கள் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் என்பதை விவரிக்கும் நாவல்.

“எங்கோ எப்படியோ ஒருவர் கொல்லப்படும்போது அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று கை காட்டிக் கொந்தளித்து மக்களுக்குள் சண்டை மூட்டியது யார்? எதையும் முழுமையாகப் புதுப்பிக்க முடியாது. நாடி நரம்புகளில் ஓடும் ஜீவ ரத்தம்போல மதம் மனிதர்களின் நாளங்களில் படர்ந்து படர்ந்து பற்றியெறியும் காலம். ஆயினும், நிரபராதிகள் கொன்றொழிக்கப்பட்டதற்கு, சகோதரிகள் கற்பழிக்கப்பட்டதற்கு, குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டதற்கு யார் யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனை கிடைத்திருக்க வேண்டும். சட்டங்களும் நீதிபீடங்களும் - கிடைத்த ஆதாரங்கள், சாட்சிகளின் அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, பெரும்பாலும் உண்மை தோற்கும்போது யாராவது அந்தப் பெரிய தண்டனையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது… “ (நாவலிலிருந்து)

140 pages, Paperback

First published September 1, 2013

1 person is currently reading
4 people want to read

About the author

E.K. Sheeba

6 books2 followers
Sheeba E.K (Malayalam:ഇ.കെ ഷീബ; born 20 May 1975 to E K SOOPI and K. AYISHA) is an Indian author who writes in Malayalam. She was born in Perinthalmanna, Malappuram district in Kerala state. Sheeba was educated at GHS Perinthalmanna, PTM Government College Perinthalmanna and M.E.S. KALLADI COLLEGE Mannarkkad. She took her master's degree in commerce from MES Kalladi College Mannarkkad.She is working as Senior Clerk in Department of General Education Kerala since 2001.Based upon her story, named The Survival, a short film for children has been produced by Perinthalmanna Municipality.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
2 (66%)
2 stars
1 (33%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
November 11, 2017
{தமிழில் மொழிபெயர்ப்பு : யூமா வாசுகி}

எங்கோ பொறியாகக் கிளப்பப்படும் மதவாதம் மொத்தத்தையும் சுருட்டி தனக்கு இரையாக்கி மனிதரிடம் தீரா வலியையும்,வடுக்களையும் விட்டுச் செல்கிறது.அதில் பாதிக்கப்படுபவர்கள் பலருக்கு தான் என்ன காரணத்தால் பாதிப்புக்குள்ளானோம் என்ற விவரம் கூட அறியமுடியவில்லை.

பிழைப்புக்காக மலையாள இந்துவான ராஜசேகர் மும்பைக்கு இரயில் ஏறிய நொடியிலில் இருந்து அவ்வூர் அவரை அரவணைத்துக் கொள்கிறது.தனக்கு உதவியவரிடமே வேலையில் அமர்ந்தவர் அவரின் இழப்பிற்குப் பிறகு நிராதரவான அவரின் மகளை மணந்து கொள்கிறார்.

முஸ்லீம் பெண்ணை மணந்தது மட்டுமில்லாமல் எந்தவித சமரசமும் இல்லாமல் அவர் அவர்களுக்கான மதத்தைத் தொடர்வது சுற்றியுள்ளவர்களை இவர்களிடமிருந்து விலக்க வைக்கிறது.

எவ்வளவு முன்னேறினாலும் மனிதன் மதத்தை விட ஒருபோதும் முயல்வதில்லை.அதைக் கொண்டு அடுத்தவர்களின் இரத்தத்தை ருசிபார்க்கும் குணத்தையும் விட்டொழிவதுமில்லை.
அரசாங்கத்தில் கான்ட்ராக்ட் எடுக்கும் ராஜசேகருக்கு அங்கே நடக்கும் முறைகேடுகள் பிடிக்காமல் போகச் சொந்த ஊருக்கு திரும்பும் நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரை பொட்டலமாகக் கட்டி எடுத்து வந்து அவரின் மகள் துனியாவிடம் ஒப்படைக்கின்றனர்,தற்கொலை என்று அதை முடித்தும் வைக்கின்றனர்.

பொருளாதாரரீதியாக நலிந்து போகும் துனியாவிற்குக் குடும்பத்தில் உள்ளவர்களும் சோர்வையே அளிக்கின்றனர்.பள்ளி பருவத்தில் தன்னிடம் வராத காதலை வற்புறுத்திய சஹீரிடமே உதவி கேட்கும் நிலை ஏற்படுகிறது.இடைப்பட்ட காலத்தில் தடம் மாறிய சஹீரை ஒருபோதும் மனம் ஏற்காது என்பதை மீண்டும் அவன் காதலை மொழியும் முன்பு உறுதியாக மறுத்துவிடுகிறாள்.

பணப்பிரச்சனையில் இருந்து மீண்டு சற்றே ஆசுவாசம் அடைய குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பணியில் அமர்பவளின் வாழ்க்கை திசை மாறிவிடுகிறது.

குஜராத் கலவரத்தில் தம்பியை இழந்து,பெருங்கனவில் இருந்த தங்கை தவறான வழியில் போனதை தடுக்க முடியாமல் எஞ்சிய வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ தாயும் மற்றுமொரு தங்கைக்கும் பணத்தை முதலீடு செய்துவிட்டு அரசாங்கத்தால் தேசதுரோகி என்றழைக்கப்பட்டவரின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க அவருடன் கைகோர்க்கிறாள் துனியா.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.