திரைப்பட நாயகனான யுவராஜ் கட்டாயத்தின் பெயரில் ப்ரொடியூசரின் மகளான நந்திதாவை திருமணம் செய்து கொள்கின்றான். பெண்களை பார்த்தாலே அவனுக்கு இனம் புரியாத வெறுப்பு மனதில் படர்ந்து இருக்க, நந்திதாவையும் ஒதுக்கி வைக்கின்றான். இதனிடையே அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து இருக்க, ராஜகோட்டை என்னும் பாழடைந்த சாம்பிராஜியத்தை நோக்கி அவர்கள் பயணம் ஆரம்பிக்கின்றது. அங்கே அவர்கள் முன் ஜென்மம் பற்றிய ரகசியம் தெரிய வர, அவன் பெண்களை வெறுப்பதற்கான காரணமும் தெரிய வருகின்றது. அவர்கள் முன் ஜென்மத்தில் நடந்தது என்ன? இந்த ஜென்மத்தில் ஒன்று சேர்ந்தார்களா? என்று பல கேள்விகளுக்கு பல திருப்புமுனைகள் உள்ளடங்கிய இந்த நாவலில் பதில் இருக்கும்..