தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (19021944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும் அவர் எழுதாத கதைகளை நீக்கியும் இத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டும் இதழ்களில் இருந்து புதிய கதைகளைக் கண்டடைந்தும் நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு அவசியமான பின்னிணைப்புகளுடன் தெளிவாகச் செய்யப்பட்டுள்ள செம்பதிப்பு இது. ஆய்வாளருக்குப் பயன்படும் விரிவான பதிப்புரையும் வாசகருக்கு உதவும் வகையில் கதை நுட்பங்களை விளக்கும் ஆய்வுரையும் இப்பதிப்பின் சிறப்புகள்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.
Ku pa ra written this collective short stories in 1930s to 40. Ovvoru sirukadhaiyum oru oru kavidhai maadhari mudiyum. Very deep and intriguing. While reading his short stories I used to keep reading few lines again and again that’s how poetic and mind blowing his writing skills. Few authors remain in our memories forever after reading their books and he is such one. I loved his writing. Loved all the short stories in this. onnu onnum still can relate to this current year. My fav In this short story is ‘kanagambaram’ he writes about feminism and pen suthanthiram in that and we can still relate now.