சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் இந்நூல் 1988ம் ஆண்டில் எழுதப்பட்டு 1989ல் முதலாவது பதிப்பாக வெளிவந்தது.
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையாக - பண்பாட்டின் பேரால் பல சோலிகட்குட்பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தாழ்த்தப்பட்டோர் எதிர் உயர்த்தப்பட்டோர் என மத வாதப் பழைமைப் பற்றுடன் அட்டூழியம் செய்த இரு வேறுபட்ட தமிழர்களை ஒன்றுபடுத்திய பெருமையைத் தீண்டாமைக்கெதிரான போர் தீர்மானித்தது. அமெரிக்க மிஷன் வருகை, கற்றறிந்த தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்பு, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், சிறுபான்மைத் தமிழர் மகாசபை, பீக்கிங் சார்பு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகியவற்றின் ஒடுக்கலுக்கெதிரான மகஜர்களில் தொடங்கிய போராட்டம் அதன&#